என் மலர்
இந்தியா

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏக்கள் - வீடியோ
- பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது
- இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட அமளி காரணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 3 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் வக்பு சட்டத்திருத்தம் தொடர்பான கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் அவைக்கு வெளியே ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் பாஜகவினரும் இடையே மோதல் வெடித்தது.
ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மெஹ்ராஜ் மாலிக், பண்டிகைகளின் போது இந்துக்கள் குடிபோதையில் இருப்பார்கள் என்று கூறியதற்காக பாஜக எம்எல்ஏக்களால் அவைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டார்.
"ஒரு முஸ்லிம் சம்பந்தப்படும் போதெல்லாம் பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்துக்கள் போதைக்கு அடிமையாவது குறித்து அவர்களுக்கு கவலையில்லை. மதுக் கடைகளை மூடுவார்களா என்று கேளுங்கள்.
இல்லை, பண்டிகைகளின் போதும், திருமணங்களின் போதும் இந்துக்கள் குடிப்பதால் அவர்கள் அவற்றை மூட மாட்டார்கள், ஆனால் பாஜக இந்த போதையிலிருந்து விடுபட விரும்பவில்லை. ஒரு அரசியல்வாதிக்கு ஒருபோதும் மதம் இருக்கக்கூடாது" என்று அவர் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்எல்ஏக்கள் அவருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதன்பின் அவைக்குள் சென்ற மெஹ்ராஜ் மாலிக் தன்னை பாஜக எம்எல்ஏக்கள் தாக்கியதாக மேஜை மீது ஏறி நின்று முறையிட்டார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.






