search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dearness allowance"

    • மதுரையில் அகவிலைப்படி வழங்க கோரி அரை நிர்வாண போராட்டம் நடந்தது. இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை கே.புதூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓய்வூதி யர்கள் மேல் சட்டை அணியாமலும், பெண்கள் கருப்பு முகக்கவசம் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.

    அப்போது மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. விதவைகள், விவாகரத்து பெற்றோர் மற்றும் ஊன முற்றோருக்கான குடும்ப ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயதானவர்களுக்கு 10 சதவீதம் பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். ஒப்பந்த ஓய்வூதியர் பனிக்காலத்தையும் ஓய்வூதியத்தில் கணக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் மாரிச்சாமி, செயலாளர் சர்தார் பாட்ஷா, பொருளாளர் பால்ராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் பால்ராஜ் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
    • 3 ரெயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்வது தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். அவர்கள் கூறியதாவது:

    விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி 34 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதால், அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

    இதன்மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். சிவில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும்.

    மேலும், புதுடெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி ஆகிய ரெயில் நிலையங்களை மறுமேம்பாடு செய்வது தொடர்பான இந்திய ரெயில்வேயின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது. இதன்மூலம் 34744 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். லட்சக்கணக்கான பயணிகளுக்கு பயண அனுபவம் மேம்படும். உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் வழக்கு
    • அகவிலைப்படி உயர்வை வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக வழக்கறிஞர் வாதிட்டார்.

    சென்னை:

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுளள்து.

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    அதன்பிறகு நான்குமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டபோதும், தங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற பணியாளர் நலச்சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரித்தார்.

    அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அகவிலைப்படி உயர்வை வழங்க மறுத்ததால் 86 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும், 20 அயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் நிலையில், தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சம் என்றும் வாதிட்டார். மேலும், கடந்த ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    ஆனால் நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற துறைகளில் போதுமான நிதி இருப்பதாகவும், குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அரசு, போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கு 81 கோடி ரூபாய் செரலவாகும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம், நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு வழங்கி வருவதாக அதிருப்தி தெரிவித்தார். நிதி நெருக்கடியை ஒரு காரணமாக சொல்லும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

    அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அகவிலைப்படி உயர்வை வழங்கியது தொடர்பான அறிக்கையை நவம்பர் 25ம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. #UnionCabinet #DearnessAllowance
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால், அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயருகிறது.

    கடந்த ஜனவரி 1 முதல், முன்தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வு காரணமாக, நாடு முழுவதும் உள்ள சுமார் 48 லட்சத்து 41 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 62 லட்சத்து 3 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் தெரிவித்தார்.

    7-வது சம்பள கமிஷன் சிபாரிசுகள் அடிப்படையில் வகுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
    ×