

மத்திய அரசுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியில் 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை இன்று காலை கூடியது. தீபாவளி மற்றும் பண்டிகை காலம் ஆகிவற்றை கணக்கில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 3 சதவீதத்துடன் மொத்தம் 45 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட இருக்கிறது.
விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போதைய நுகர்வோரின் விலை குறியீட்டை கணக்கில் எடுத்துக் கொண்டு வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி மாற்றியமைக்கப்படும்.