search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education officer"

    • பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
    • தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

    • சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது.

    சேலம்:

    சேலம் கோட்டை பெண்கள் பள்ளியல் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளியில் மாணவிகளுக்கு போதுமான கழிவறை மற்றும் குடிநீர் வசதி இல்லை என்றும், கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வில்லை என்றும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து மாணவிகளின் பெற்றோ ர்களும் தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி மோகன் இன்று காலை பள்ளியில் உள்ள கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி களையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரி யரிடமும் விசாரணை நடத்தி வரு கிறார். இத னால் பள்ளியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.
    • ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்

    திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த பாலமுரளி கடந்த மே மாதம் 15-ந்தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றார்.தற்போது அவர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த உஷா திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்க உள்ளார்.

    அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, கோவை, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர்களும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    • அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது.
    • 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    குன்னூர்,

    குன்னூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் அறிமுக விழா நடந்தது. குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் தலைமை தாங்கினார்.

    அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுமதி மாணவ மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாட்டு பாடி அசத்தினார். அதன்பிறகு இளம்தலைமுறையினருக்கு கல்வி மிகவும் முக்கியம்.

    தமிழக அரசு கல்வி மேம்பாட்டுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் படிக்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

    இதனை தொடர்ந்து நான் முதல்வன் கல்லூரி கனவு என்ற கையேடு மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அடுத்தபடியாக 12-ம் வகுப்புக்கு பிறகு என்ன மேல்படிப்பு படிக்கலாம் என்பது தொடர்பாக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

    இதற்கிடையே மாணவ- மாணவியருக்கு தேவையான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை பெறும் வகையில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 

    • மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியாகும்.
    • அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மூடப்படும்.

    கோவை,

    கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தனியார் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாதவை, ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியவை, கூரைகள் உடன் செயல்படுபவை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செயல்படுபவை ஆகியவற்றை தமிழக அரசின் புதிய உத்தரவின்படி மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

    இருந்தபோதிலும் ஒருசில கோப்புகள் பரிசீலனையில் இருப்பதால், அந்த பள்ளிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பின், அடுத்த பெயர் பட்டியலில் அறிவிக்கப்படும். எனவே தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளிகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அப்போது மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்களும் வெளியாகும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #LokSabhaElections2019
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக இருப்பவர் நாகராஜ். காவேரிப்பட்டணம் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். இவர்கள் இருவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இவர்கள் பிரசாரம் செய்வது போன்ற புகைப்படம் ஆதாரத்துடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான டாக்டர் பிரபாகர் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி விசாரணை நடத்தி கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரி நாகராஜ், மற்றும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.  #LokSabhaElections2019




    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கல்வி அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    லாலாப்பேட்டை:

    கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப்பு விடுப்பு ஒப்படைப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு 1 ஆண்டாகியும் பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படவில்லை.

    ஜூன் 2018ல் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு புதிய ஊதியம் வழங்கவில்லை. எனவே அவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட 22 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கிருஷ்ணராயபுரம் வட்டார கிளையின் அமைப்பு குழு தலைவர் சக்திவேல், செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில் ஆசிரியர்கள் பகுதி -2 வட்டார கல்வி அலுவலரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    கோரிக்கைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் 1 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். #tamilnews
    மணப்பாறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி உள்ளது. இங்கு 125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த 2012-13-ம்ஆண்டு தரம் உயர்த்துவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு பணமும் கட்டப்பட்டது. ஆனால் அப்பள்ளி இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. இந்தாண்டு 2018-19ம் கல்வியாண்டிலாவது தரம் உயர்த்தப்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான அரசாணையில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுவாவில் 2 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டது.

    இதனால் மணப்பாறை பகுதியில் தரம் உயர்த்தப்படாத பள்ளிகளை தரம் உயர்த்தக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று பண்ணப்பட்டி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி கிராம மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை தரம் உயர்த்தப்படாததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தி.முக. மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் கல்வி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

    ×