என் மலர்

  செய்திகள்

  சஸ்பெண்டு செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
  X
  சஸ்பெண்டு செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

  அமமுக கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். #LokSabhaElections2019
  கிருஷ்ணகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரியாக இருப்பவர் நாகராஜ். காவேரிப்பட்டணம் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ். இவர்கள் இருவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

  இவர்கள் பிரசாரம் செய்வது போன்ற புகைப்படம் ஆதாரத்துடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான டாக்டர் பிரபாகர் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி விசாரணை நடத்தி கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அதிகாரி நாகராஜ், மற்றும் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.  #LokSabhaElections2019
  Next Story
  ×