என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேட்டிங் செயலி"

    • இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர்.
    • இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (வயது26). இவருக்கு 'டேட்டிங்' செயலி மூலமாக மலப்புரம் வண்டூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமானார்.

    இதையடுத்து அவர்கள் இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை உருவாக்கி உள்ளது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.

    அனந்த கிருஷ்ணன் வார்த்தையை நம்பிய அந்த இளம்பெண், அவர் அழைத்ததன்பேரில் பொட்டம்மல் பகுதியில் உள்ள லாட்ஜூக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். மேலும் அந்த பெண்ணும் போன் செய்ய முடியாதவாறு செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், லாட்ஜில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அனந்தகிருஷ்ணன் மீது போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.

    'டேட்டிங்' செயலியில் பழகிய இளம்பெண்ணை லாட்ஜூக்கு வரவழைத்து வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான்.
    • சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், தனது தாயின் செல்போன் மூலமாக சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

    அதில் சில நபர்கள், அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவரம் அவரது தாய் மூலமாகத்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

    சம்பவத்தன்று சிறுவன் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது வெளியே சென்றிருந்த அவனது தாய் திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அவர் வந்ததும் சம்பந்தமில்லாத ஒரு நபர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அது யார்? என்று கேட்டபோது சிறுவன் சரியாக பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவன் பயன்படுத்திய தனது செல்போனை சிறுவனின் தாய் சோதனை செய்தார். அப்போது சில வித்தியாசமான செயலிகள் தனது செல்போனில் இருப்பதை அவர் பார்த்தார். இதனால் சந்தேகமடைந்த அவர், போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் சிறுவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவர்களிடம் தான், சிறுவன் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை தெரிவித்திருக்கிறான். சிறுவன் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அப்போது சிறுவன் 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவனை தவறாக பயன்படுத்திய நபர்களை பற்றிய தகவல்களும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் படன்னக்காடு சைனுதீன்(வயது52), வெள்ளச்சல் சுகேஷ்(30), வடக்கக்கொவ்வல் ரைஸ்(40), கலோலாடு அப்துல் ரகுமான்(55), சந்தேரா பகுதியை சேர்ந்த அப்சல்(23), சித்தராஜ்(48) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் சைனுதீன் என்பவர் பேக்கல் பகுதியில் உள்ள கல்வி அலுவலகத்தில் மாவட்ட துணைக்கல்வி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் உள்பட இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவனை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவாக உள்ள சிராஜ் என்பவர் உள்பட மேலும் 7 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக் கின்றன. அவர்கள் தலைமறைவு நபர்களை பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் கல்வி அதிகாரி சைனுதீன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்தார்.

    சிறுவன் பாலியல் வன்கொடுமை வழக்கில் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    திருவனந்தபுரம்:

    செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.

    அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.

    14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும்.
    • டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.

    திருப்பதி:

    சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் செயலிகளுக்குப் பிறகு டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமான மோசடிகளாக மாறி வருகிறது.

    நீங்கள் தனியாக இருக்கிறீர்களா சலிப்பாக இருக்கிறதா நானும் தனியாக இருக்கிறேன். நாம் கொஞ்ச நேரம் பேசலாமா, ப்ளீஸ், என குண்டூரைச் சேர்ந்த வாலிபருக்கு ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினார்.

    யோசிக்காமல் வாலிபர் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். இரவும் பகலும் எந்த வித்தியாசமும் இல்லை அவளுடன் அரட்டை அடிப்பதே வேலையாக நீடித்தது.

    அவ்வப்போது வீடியோ அழைப்புகள் சின்னச் சின்னப் பேச்சுகளில் இருந்து தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வரை பரிச்சயமானார்கள்.

    ஒருநாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று இளம்பெண் கேட்டார்.

    வாலிபர் சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும் சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் இளம்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் 10 லட்ச ரூபாயை தவணைகளாக அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு இளம்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-

    டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்கான அரட்டை, போதை தரும் பேச்சு மயக்கும் அழைப்பு, அவை உலகத்தையே மறக்கச் செய்கின்றன. கடைசியில் அதில் மூழ்கடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.

    சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும். சிலர் இளம்பெண்களை செயலிகளில் பதிவு செய்ய வைத்து வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.

    அவர்கள் முதலில் அரட்டையடிக்கத் தொடங்குவார்கள். படிப்படியாக அறிமுகம் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்னேறுகிறது. சிலர் நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    இதைப் பதிவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.
    • பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    டெல்லி, மும்பை போன்ற நகரப்பகுதிகளில் டேட்டிங் கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடிகள் தங்கள் துணையை தேடுவதற்காகவே பிரத்யேக செயலிகளும் உள்ளது.

    இந்நிலையில் இந்த செயலிகளை பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களும் நடக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல டேட்டிங் செயலிகளில் ஒன்றான டிண்டர் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.

    18 ஜாகர்பாம்ப்ஸ், 2 ரெட்புல்ஸ், பிரெஞ்ச்பிரைஸ், சாலட் உள்பட உணவு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. இவற்றையெல்லாம் ருசித்த வாலிபர் பில் வந்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெண் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.44.829 பில் வந்தது. பின்னர் நண்பரிடம் உதவி கேட்டு பில் தொகையை செலுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் நண்பர் உணவக பில்லை ரெடிட் தளத்தில் பதிவிட அது பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.

    பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் உண்மையிலேயே இவ்வளவு நீண்ட பட்டியல் கொண்ட உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டதா? என உறுதி செய்ய சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்யுங்கள். மோசடி நடந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளனர்.

    • டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
    • இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    ஜூலியோ எனப்படும் ஆன்லைன் சிங்கிள்ஸ் கிளப், YouGov உடன் இணைந்து, இந்தியாவில் மேட்ச்மேக்கிங் ஆப் அனுபவங்கள் குறித்த ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    சமீப காலமாக இந்தியாவில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் நிதி மோசடிகள் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

    இந்த ஆய்வில் பதில் அளித்த 78% பெண்கள் போலியான Profile-களை எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 82% பெண்கள் இதுபோன்ற செயலிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசின் அடையாள அட்டைகளை கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். மேலும் இதுபோன்ற செயலிகள் மூலம் 48% பேர் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர்.

    74% பேர் தங்கள் சுயவிவரங்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

    • ‘டேட்டிங்’ அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார்.
    • அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயதுடைய என்ஜினீயர் ஒருவர், 'ஆன்லைன்' செயலிகளில் மூழ்கி இருந்தார்.

    அப்போது அழகிகள் படங்களுடன் 'டேட்டிங்' செயலிகள் அவரை ஈர்த்தன. அவர் ஒரு செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் ஒரு அழகியின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அந்த அழகி தனது கவர்ந்து இழுக்கும் காந்த குரலால், என்ஜினீயர் இளைஞரை கட்டிப் போட்டுவிட்டார்.

    'டேட்டிங்' அழகியின் தேன் குரலில் அவரும் மயங்கினார். இதனால் அழகியின் நினைவில் இளைஞர் மூழ்கிப்போனார். அழகியை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட அவர், கடந்த 22-ந்தேதி அன்று 'டேட்டிங்' அழகியை தனது இல்லத்துக்கு வரவழைத்தார்.

    அழைப்பை ஏற்று வந்த அழகியும் அவருக்கு உல்லாச விருந்து படைத்தார். உல்லாசத்தில் சொக்கிப்போன அந்த இளைஞர், அழகிக்கு தனது வீட்டை சுற்றி காட்டினார்.

    அழகி சென்றவுடன், சுயநினைவுக்கு வந்த இளைஞர், வீட்டில் உள்ள பொருட்களை சரிபார்த்தார். பீரோவை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    அவர் பீரோவில் வைத்திருந்த ரூ.2½ லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க நாணயங்கள் மாயமாகி இருந்தன. தன்னை சபல வலையில் வீழ்த்தி டேட்டிங் அழகி கைவரிசை காட்டி இருப்பதை அவர் உணர்ந்தார்.

    இளைஞருக்கு பதற்றம் ஏற்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வெட்கப்பட்டார்.

    நகை முக்கியமா? மானம் முக்கியமா? என்று அவரது மனதில் கேள்விகள் எழுந்தன. நகைத்தான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். எனவே நடந்த சம்பவங்களை மனுவாக எழுதி அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அந்த அழகியின் புகைப்படம், செல்போன் எண் போன்ற விவரங்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    சபல வலையில் வீழ்ந்த என்ஜினீயருக்கு உல்லாச விருந்து படைத்து நகையை அபேஸ் செய்த 'டேட்டிங்' அழகியை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த அழகி விரைவில் கைதாவார் என்று தெரிகிறது. அப்போதுதான் அந்த அழகியிடம் எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளார்கள்? என்ற விவரம் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞர் கைது.
    • அவரிடம் இருந்து மொபைல் போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த இளைஞர் துஷார் சிங் பிஷ்ட்(23) , உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டாகப் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் இளம்பெண்களைக் குறிவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அதன்படி, ஆன்லைனில் பல்வேறு போலி கணக்குகளை தொடங்கிய துஷார் சிங் 18 முதல் 30 வயது வரையிலான பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார். அவர்களிடம் தன்னை ஒரு அமெரிக்க மாடல் என்றும், திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி இந்தியாவிற்கு வந்துள்ளதாகவும் துஷார் சிங் கூறியுள்ளார்.

    இதனை நம்பி பல இளம்பெண்கள் இவரது வலையில் விழுந்துள்ளனர். அந்தப் பெண்களின் நம்பிக்கையை பெற்ற பின், அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துஷார் சிங் கேட்டுள்ளார். அந்தப் பெண்களும் அவற்றை இவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பெற்ற பின் துஷார் சிங் தனது வேலையைக் காட்ட தொடங்கினார்.

    சம்பந்தப்பட்ட பெண்களிடம் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகக் கூறி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சியில் துஷார் சிங் இறங்கியுள்ளார். அவரது மிரட்டலுக்கு பயந்து ஏராளமான பெண்கள் பணத்தை வழங்கினர். இவ்வாறு தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான பெண்களை துஷார் சிங் ஏமாற்றி வந்துள்ளார்.

    இந்நிலையில், துஷார் சிங்கால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் துஷார் சிங்கின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    விசாரணையில், துஷார் சிங் இதுவரை சுமார் 700 பெண்களிடம் தன்னை அமெரிக்க மாடல் எனக்கூறி ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து மொபைல் போன், 13 கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×