search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "young man arrested"

  • ரேசன் கடை பகுதியில் தூங்கும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
  • தகராறில் தொழிலாளி தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  வருசநாடு:

  தேனி மாவட்டம் வருச நாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது72). இவரது மனைவி இறந்து விட்டதால் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

  இரவு நேரத்தில் அப்பகுதி யில் உள்ள ரேசன் கடை வராண்டாவில் தூங்குவார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பவரும் தூங்கினார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

  இது குறித்து லட்சுமணன் சதீஷ்குமாரின் பெற்றோரி டம் தெரிவித்தார். அவர்கள் சதீஷ்குமாரை கண்டித்தனர்.

  இந்த நிலையில் வெளியூர் சென்ற சதீஷ்குமார் மீண்டும் ஊர் திரும்பினார். அப்போது ரேசன் கடையில் தூங்குவதற்காக சென்றார். அங்கு தூங்கிக்கொண்டி ருந்த லட்சுமணனுடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் கல்லை எடுத்து லட்சுமணன் தலையில் போட்டார். இதில் அவர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதையடுத்து அங்கிருந்து சதீஷ்குமார் தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் லட்சுமணன் இறந்து கிடப்பதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அப்பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • விற்பனையாளர் மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த வாலிபர் விற்பனையாளரை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  வேடசந்தூர்:

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கூத்தாம்பட்டியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக முருகேசன் (வயது 45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 2 பேர் வந்து மதுபானம் ஓசியாக தருமாறு கேட்டனர். அதற்கு முருகேசன் ஏற்கனவே வாங்கிய மதுபானத்திற்கு பாதி பணம் தரவில்லை. மறுபடியும் ஓசியா என கேட்டு தர மறுத்துள்ளார்.

  இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படி இருந்தாலும் கடையை விட்டு வெளியே வா, உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி உள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க முருகேசன் கடையை விட்டு வெளியே வந்தபோது மறைந்திருந்த அவர்கள் 2 பேரும் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் முருகேசனை கத்தியால் குத்தியது மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த அருண்குமார் (34) என தெரியவரவே அவரை கைது செய்தனர்.

  மேலும் அருண்குமாரின் கூட்டாளியை தேடி வருகின்றனர். இந்த கடையில் இதுபோல விற்பனையாளரை ஓசி மதுபானம் கேட்டு தாக்குவது இது 4வது சம்பவமாகும்.

  • வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
  • புகாரின்பேரில் சேவல்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிபட்டி:

  ஆண்டிபட்டி அருகே ரோசனம்பட்டியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது51). இவர் தனது தோட்டத்தில் செட் அமைத்து சண்ைட சேவல்கள் வளர்த்து வருகிறார்.

  சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது 3 சேவல்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இறைச்சி கடையில் அவரது சேவல்களை அஜித், சுந்தரேசன், துரைச்சாமி ஆகியோர் விற்க விலை பேசினர்.

  இது குறித்து அறிந்ததும் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

  • வாலிபர் ஒருவர் சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
  • புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள ஆவிளிபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த்(29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். டைல்ஸ்ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த 32 வயது மனநலம் பாதித்த பெண்ணை தொட ர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

  இதனால் அந்த பெண் 4 மாத கர்ப்பிணியானார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து பெற்றோர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து ச்சென்ற னர். அப்போது அவர் கர்ப்பிணி யாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடை ந்தனர். இதுகுறித்து சாணா ர்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
  • அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  குள்ளனம்பட்டி:

  கோவை மாவட்டம் பொ ள்ளாச்சியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 35).கூலி த்தொழிலாளி. இவர் கடந்த 8ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லை அடுத்த கூவன த்துவில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்தார். அப்போது அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

  பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன் தனிப்படை போ லீசாருக்கு உத்தரவிட்டார்.

  அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி. கோகுல கிருஷ்ணன் மே ற்பார்வையில், நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மருதுபாண்டியின் மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் எடுத்துச் செல்வது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபரின் புகைப்படம் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

  அதில் அவர் பொன்மாந்துறை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அரவிந்த் குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அரவிந்த் குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திண்டுக்கல், வடமதுரை பகுதிகளில் திருடிய 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர்.
  • பைக்கில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் போலீசார் கைது செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

  உத்தமபாளையம்:

  உத்தமபாளையம் போலீசார் தண்ணீர் தொட்டி தெரு, கோம்பை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பிஓடிவிட்டனர்.

  ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் விசாரித்தபோது கஞ்சா விற்பனைக்காக கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரதீபன்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிஓடிய சதிரேஸ்வரன், அம்மாவாசி ஆகியோரை தேடி வருகின்றனர்.

  • மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28).
  • அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் 2 பேரிடமும் தகராறு செய்தார்.

  நெல்லை:

  மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது28). இவரது உறவினர் சுரேஷ் (28). இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவர் அவர்களிடம் தகராறு செய்தார்.

  இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் அவர்களை அவதூறாக பேசி கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் மேலப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தார்.

  • ரவுடி வாலிபரை மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.1000-ஐ பறித்து கொலை மிரட்டல் விடுத்தார்.
  • புகாரின் பேரில் ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  நிலக்கோட்டை:

  நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் தினகர்(24). இவர் அதேபகுதியில் தனியார் கேபிள் டி.வியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று அணைப்பட்டி அருகே உள்ள சொக்குபிள்ளைப்பட்டி பிரிவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) என்பவர் சட்டையில் இருந்த ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தினமும் இதேபோல் குடிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

  இல்லைஎன்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தினகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய சத்தியமூர்த்தியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

  • தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
  • அவரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

  தேனி:

  தேனியை சேர்ந்தவர் வினோத்குமார்(21). இவர் அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசைவார்த்தை பேசி வந்துள்ளார். மேலும் தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.

  இதையடுத்து இந்த விசயம் பெற்றோருக்கு தெரிய வரவே வினோத்குமார் மீது தேனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வினோத்குமாரை கைது செய்து குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • கள்ளக்காதலியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • போலீசார் வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே உள்ள மாலப்பட்டி அன்னை காமாட்சி நகரைச் சேர்ந்த முருகேசன் மனைவி செல்வராணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனபால் (25), சண்முகசுந்தரம் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தனபாலுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார். சண்முக சுந்தரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

  இந்நிலையில் செல்வ ராணிக்கும் குமரன் திருநகரைச் சேர்ந்த பிரபு (44) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் ஒன்றாகவே வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபரம் செல்வராணியின் மகன்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர்.

  இதனால் பிரபுவின் தொடர்பை செல்வராணி துண்டிக்க நினைத்தார். அதன்படி அவருடன் பேசுவதை குறைத்து வந்துள்ளார். கடந்த 2-ந் தேதி இருவரும் ஒரே இடத்துக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பிரபு தனது காதலிக்கு உணவு வாங்கி வந்துள்ளார். அதனை செல்வராணி சாப்பிட மறுத்தார். ஏன் என்று கேட்டபோது இனிமேல் எனக்கு எதுவும் வாங்கித் தர வேண்டாம். என்னுடன் பேசவும் வேண்டாம் என்று உறுதியாக கூறியுள்ளார்.

  இதனால் வேதனை யடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அப்போது செல்வராணி அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தனது வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் பிரபுவும் வீட்டுக்கு வந்து நீ என்னுடன் பேசாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

  அதற்கு செல்வராணி அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இனிமேல் என் மகன்கள் சொல்வதை த்தான் நான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த பிரபு நானே சாகப்போகிறேன். நீ மட்டும் எதற்காக உயிரோடு இருக்க வேண்டும் எனக்கூறி அருகில் இருந்த குளவிக் கல்லை அவரது தலையில் போட்டார்.

  இதில் சம்பவ இடத்திலேயே செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பிரபு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

  இந்நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெ க்டர் அருள்நாராயணன் தலைமையிலான போலீசார் பிரபுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.