நிலக்கோட்டை அருகே பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

ரவுடி வாலிபரை மிரட்டி சட்டைப்பையில் இருந்த ரூ.1000-ஐ பறித்து கொலை மிரட்டல் விடுத்தார்.புகாரின் பேரில் ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் தினகர்(24). இவர் அதேபகுதியில் தனியார் கேபிள் டி.வியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அணைப்பட்டி அருகே உள்ள சொக்குபிள்ளைப்பட்டி பிரிவில் உள்ள ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(25) என்பவர் சட்டையில் இருந்த ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தினமும் இதேபோல் குடிப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும்.

இல்லைஎன்றால் கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தினகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய சத்தியமூர்த்தியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com