என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  போடி அருகே பெண் தர மறுத்ததால் தாக்கிய வாலிபர் கைது
  X

  கோப்பு படம்

  போடி அருகே பெண் தர மறுத்ததால் தாக்கிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண் தர மறுத்ததால் வாலிபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
  • புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி மாவட்டம் போடி முனிசிபல் காலனியை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி ஜோதி. இவரது மகளை அதேபகுதியை சேர்ந்த கருப்பையா மகன் கண்ணன்(19) என்பவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டார். அதற்கு ஜோதி பெண் தர மறுத்துவிட்டார்.

  இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜோதியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜோதி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குபதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

  போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த மணிமாறன் மனைவி பெண்ணிலா(44). இவருக்கும் போடி புதுக்காலனியை சேர்ந்த இளந்தமிழன் என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு சென்ற இளந்தமிழன் எங்கே உனது கணவர் என பெண்ணிலாவிடம் கேட்டார்.

  அவர் தனக்கு தெரியாது என கூறவே அவரை காலால் உதைத்து தாக்கி கணவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டிச்சென்றார். இதுகுறித்து போடி டவுன்போலீசில் கொடுத்த புகாரின்ேபரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×