என் மலர்
இந்தியா

11 வயது சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை தந்த குஜராத் பள்ளி ஆசிரியை கைது
- சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
- அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர்.
பதினொரு வயது சிறுவனை கடத்தி பாலியல் தொல்லை செய்ததற்காகக் குஜராத் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
சிறுவன் காணாமல் போனது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு, குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
விசாரணையின்படி, ஏப்ரல் 25 ஆம் தேதி, ஆசிரியை மான்சி சிறுவனுடன் சூரத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் அகமதாபாத்தையும், பின்னர் வதோதரா வழியாக டெல்லியையும் அடைந்தார்.
அங்கிருந்து இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கினர். தற்போது சிறுவன் மீட்கப்பட்டு ஆசிரியை மான்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.






