search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "apes"

    • சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
    • பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சாமிநாயக்கன்

    பட்டி அடிக்காரை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி விஜயா (வயது 47). இவர் சம்ப வத்தன்று சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வேறு பகுதிக்கு செல்வ தற்காக பேருந்து நிலை யத்தில் காத்திருந்தபோது, பையில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை, செல்போன் திருடப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் அருகே உள்ள பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 32). சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் தனது ஊருக்கு செல்வதற்காக ஏறினார். பின்னர் ஸ்ரீவித்யா தனது கட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பொருட்களை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.

    இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா உடனடியாக பஸ் முழுவதும் பொருட்கள் உள்ளதா? என தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை. இது மதிப்பு சுமார் 90 ஆயிரமாகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினார்களா? அல்லது பொருட்கள் எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.
    • பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்.அவரது மனைவி பூங்கோதை (வயது 37). இவர் தனியார் மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அன்று தனியார் பஸ்சில் சின்னசேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.

    பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சின்னசேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து திருடியவர் யார் என்று போலீசார் தேடி வந்தனர்.

    அப்பொழுது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்பு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×