சின்னசேலம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பணம் அபேஸ்

கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது. பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது.
சின்னசேலம்  அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பணம் அபேஸ்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன்.அவரது மனைவி பூங்கோதை (வயது 37). இவர் தனியார் மகளிர் சுய உதவி குழுவில் வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அன்று தனியார் பஸ்சில் சின்னசேலம் செல்வதற்கு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த கைப்பையில் 3 பவுன் தங்க நகை மற்றும் 9 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றது தெரிய வந்தது.

பஸ் முழுவதும் தேடியும் கிடைக்காததால் சின்னசேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்து திருடியவர் யார் என்று போலீசார் தேடி வந்தனர்.

அப்பொழுது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் பெரம்பலூர் மாவட்டம் சிறுநிலா கிராமத்தை சேர்ந்த சையத் நபி மகன் நவுசாத் அலி என்பவர் திருடியது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்பு திருடிய நபரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com