கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை- செல்போன் அபேஸ் போலீசார் விசாரணை

2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.
கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம்  2 பவுன் நகை- செல்போன் அபேஸ் போலீசார் விசாரணை
Published on

கடலூர்:

கடலூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 2 பவுன் நகை, செல்போன் திருடப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் அருகே உள்ள பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (வயது 32). சம்பவத்தன்று இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பஸ்சில் தனது ஊருக்கு செல்வதற்காக ஏறினார். பின்னர் ஸ்ரீவித்யா தனது கட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பொருட்களை பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 2 பவுன் நகை, ஏ.டி.எம் கார்டு, செல்போன் மற்றும் 4,500 ரூபாய் பணம் இருந்ததை காணவில்லை.

இதனை தொடர்ந்து ஸ்ரீவித்யா உடனடியாக பஸ் முழுவதும் பொருட்கள் உள்ளதா? என தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை. இது மதிப்பு சுமார் 90 ஆயிரமாகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடமிருந்து நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடினார்களா? அல்லது பொருட்கள் எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com