துணிக்கடையில் புகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.
துணிக்கடையில் புகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
Published on

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 17-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி வசந்தா (65).

துணிக்கடை

இவர் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் சிறியதாக துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று துணி கடைக்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டி வசந்தாவிடம் துண்டு வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து மூதாட்டி துண்டை எடுத்து அவரிடம் காண்பித்தக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வாலிபர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்ச லிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து வசந்தா தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com