search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பல்கலைக் கழகம்"

    • தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
    • ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஞானசேகரன் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் போனில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த மாணவி அந்த சாருடனுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து ஞானசேகரனிடமிருந்து அவரது செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் ஞானசேகரன் போனில் பேசியது தொடர்பாக குரல் பரிசோதனை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர். இது பற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ள போலீசார் விரைவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று ரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக இந்த ரத்த பரிசோதனை நடத்தப்படுகிறது. குரல் பரிசோதனை போன்று இந்த ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமான பரிசோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.

    இதை தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ள போலீசார் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஞானசேகரனுக்கு கடும் தண்டனையை வாங்கி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?.
    • எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்?

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் லீக் ஆனது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    அந்த எப்.ஐ.ஆர். நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும் கிரைம் பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அவர்களில் மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல் செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

    மேலும், "விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?. பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்?. எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. 

    • அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்ட்டுள்ளான்
    • சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

    மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது..

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    • ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.

    யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கேட்டனர். கோர்ட்டு 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தது.

    அதைத் தொடர்ந்து ஞானசேகரனை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது சில தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர். அதில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனுடன் 40 போலீசார் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    • 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இணையதளத்தில் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

    அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

    இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    • தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    • எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தகவல்களை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. முன்னதாக சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனை ஏழு நாட்கள் விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்று காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    காவல் துறையின் விசாரணையில் இருந்த ஞானசேகரன் திடீர் வலிப்பு ஏற்பட்டதாக கூற அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    • ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று அதிகாலை வலிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, ஞானசேகரன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
    • கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.

    யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கேட்டனர். கோர்ட்டு 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தது.

    அதைத் தொடர்ந்து நேற்று ஞானசேகரனை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது சில தகவல்களை ஞானசேகரனிடம் இருந்து போலீசார் திரட்டியுள்ளனர். ரகசியமாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    • ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    • ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தது.

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    பிறகு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து, ஞானசேகரன், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தது.

    இந்த, மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று வந்தது.

    இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணா பல்கலை கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார்.
    • கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பொள்ளாச்சி விவகாரத்தில் 10 நாட்களுக்கு முன்பே புகார் கொடுக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எந்த அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்?

    பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு வெளிவந்தவுடன் எது உண்மை எது பொய் என்று நாட்டு மக்கள் அறிவார்கள்.

    அண்ணா பல்கலைக் கழக மாணவர் விவகாரத்தில் யாரோ ஒரு முக்கிய நபர் உள்ளார். யார் அந்த சார் என்று கேட்டால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது.

    இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவின் அனுதாபி என்று முதல்வர் கூறுகிறார்.

    முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு பயம் இருக்கிறது

    • ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.
    • பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ந்தேதி கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

    • வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

    மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

    இதற்கிடையே போலீஸ் கமிஷனருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஐகோா்ட்டு உத்தரவை நீக்கி உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×