என் மலர்
நீங்கள் தேடியது "பொறியியல் கல்லூரிகள்"
- பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
- தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது.
தற்போது பொதுப்பிரிவு கலந்தாய்வு 2-ம் சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை மட்டும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.இ., பி.டெக். படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இவர்களுக்கான முதலாம் செமஸ்டர் வகுப்புகள் வரும் டிசம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது.
முதல் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் செமஸ்டருக்கான வகுப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
- 80 கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
- உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே 80 கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
- கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
பொது கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது.
இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும்.
அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.
கட்-ஆப் மார்க் ஒன்று வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. 4 வளாக கல்லூரிகளிலும் அனு மதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்க கூடிய நிலைமையை தவிர்க்கும் வகையில் கவுன்சிலங் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
என்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
- 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
- 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
வருகிற 22-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கான ரேங்க் பட்டியல் வெளியிப்பட்டது. இந்த அண்டு பொறியியல் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப் பிரிவு களில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர்.
வேலைவாய்ப்புகளுக் கான சூழல் அதிகமாக இருப்பதால் கம்ப்யூட்டர் தொடர்பான 22,248 இடங்களை கல்லூரிகள் அதிகரித்துள்ளன.
பொறியியல் கல்லூரி களில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 1 ஆயிரமாக இருந்த இடங்கள் இந்த வருடம் 2 லட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆனால் மெக்கானிக்கல் மற்றும் சிவில் என்ஜினீயரிங் போன்ற முக்கிய பிரிவுகளில் இந்த வருடம் 3000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியதாவது:-
நல்ல உள் கட்டமைப்பு உள்ள கல்லூரிகளில் மட்டுமே தங்கள் சேர்ககையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்ஜினீயரிங் ஆகியவற்றில் கூடுதல் இடங்களை சேர்க்கத் தொடங்கியுள்ளன.
இந்த படிப்புகளில் 1,147 இடங்கள் அதிகரித்துள்ளது. 'சிப்' தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அனுமதியை பெறுவதற்கு விண்ணப்பித்த 476 கல்லூரிகளில் 223 கல்லூரிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 50 கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
உள் கட்டமைப்பு இல்லாத கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியு செய்துள்ளோம். இந்த கல்லூரிகள் உள் கட்டமைப்பு வசதியை பூர்த்தி செய்ததா? என்பது மீண்டும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
- நடப்பாண்டு 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் அனுமதி ரத்து மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியர்களை பணியில் நியமித்ததாக போலியாக கணக்கு காட்டி முறைகேடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 124 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? முறை கேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, துணைவேந்தரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.
- தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.
சென்னை:
மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது. முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதன்படி நாளை (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.






