search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரியில் சேர நாளை கடைசி நாள்

    • தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
    • 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

    சென்னை:

    மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.

    கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக கல்லூரிகள், பல்கலை கழகங்களில் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க கூடாது என யு.ஜி.சி. உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு கடந்த 22-ந்தேதி வெளியானது. முடிவு வெளியான பின்னர் 5 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

    அதன்படி நாளை (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

    இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த 4 நாட்களாக என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வந்த நிலையில் நாளை மாலையுடன் அவகாசம் முடிகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகளவில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர்.

    Next Story
    ×