search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC"

    • காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் தேதி வரை நடைபெற்றது.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடத்தப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்பட இதர பணிகளும் முடிவடைந்தன.

    இதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 2 மணிக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

    தமிழத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 15066 மாணவர்களும், 15213 மாணவிகளும் என மொத்தம் 30279 பேர் எழுதினர். இதில் 13394 மாணவர்கள், 14511 மாணவிகள் என 27905 மாணவ- மனைவிகள் தேர்ச்சி பெற்றுள்ள னர். அதாவது 92.16 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து ள்ளனர்.

    இதேபோல் இன்று மதியம் 11-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    • எஸ்.எஸ்.எல்.சி. -மதுரை மாவட்டத்தில் 91.79 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    மதுரை

    மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படை யில் அவர்கள் உயர்கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கிறது.

    எனவே மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவார்கள். அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது.

    அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்ட னர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித் துள்ளது.

    • பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும்.
    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராக உள்ளது.

    10-ம் வகுப்பு தேர்வு முடிவு 17-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.

    இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும் என்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
    • 1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

    விடைத்தாளில் உள்ள மதிப்பெண் உடனுக்குடன் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் செய்து முடிக்கப்பட்ட உடன் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.

    இதேப்போல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஈரோடு செங்கோடம்பாளையம் யு.ஆர்.சி பள்ளி, கோபி குருகுலம் பள்ளி, சக்தி ராகவேந்திரா பள்ளி, அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.

    விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.

    பின்னர் பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாட வாரியாக பிரித்து திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    91 மையங்கள்

    நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    பாளை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வி மாவட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தேர்வு நாளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13-ந் தேதி தொடங்கிய பிளஸ் -2 தேர்வு முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வு இன்று முடிவடைந்தது.

    • புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.
    • 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 35 பேர் படித்து வருகின்றனர்.

    கடந்த ஜனவரி 28-ந் தேதி முதல் 45 நாட்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி ஆசிரியர் அண்ணாமலை, 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு தேர்வு எழுதுவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் 35 மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதற்கான எழுது பொருள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவகாரம் கண்டிப்பாக இருக்கும்.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்
    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர்.

    நெல்லை:

    பாளை மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திரா சுவாமிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 329 மாணவ, மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவி மதுஸ்ரீ 595 மதிப்பெண்களும், ஜனனி 594 மதிப்பெண்களும், ஹரிஹர சுதன், பத்மா, சாரதா, வினோலின் ரத்னா ஆகிய 4 ேபரும் 591 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

    கணிதத்தில் 13 பேரும், இயற்பியலில் 5 பேரும், வேதியியலில் 21 பேரும், உயிரியலில் 12 பேரும், கணினி அறிவியலில் 3 பேரும், வணிகவியலில் 12 பேரும், வணிக கணிதத்தில் 10 பேரும், கணக்குப்பதிவியலில் 10 பேரும், பொருளியலில் 4 பேரும் 100-க்கு 100 பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 270 மாணவ- மாணவிகள் எழுதினர். அதில் மாணவி ஸ்ரீசாரதாதேவி 493 மதிப்பெண்களும், ராகவி துர்கா 492 மதிப்பெண்களும், ஜெயசிரஞ்சீவி, ரிதிவேதா ஆகிய 2 பேரும் 489 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 13 பேரும், அறிவியிலில் 4 பேரும், சமூக அறிவியலில் 1 நபரும் 100-க்கு 100 பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    ஈரோடு, ஜூன். 20 -

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 635 பேரும் என மொத்தம் 22, 548 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.28, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.03 என மொத்தம் 91. 11 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 5897 மாணவர்களும், 6351மாணவிகள் என மொத்தம் 12,248 பேர் எஸ்.எஸ் எல் .சி பொது தேர்வை எழுதினர்.

    இதில் 4671 மாணவர்களும், 5,841 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 148 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 144 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். 

    • முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.
    • அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர்.


    திருப்பூர்:

    10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஜூன் 1ந் தேதி துவங்கியது.திருப்பூரில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள், லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கிறது.10-ம்வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் திருப்பூர் இன்பான்ட் ஜீசஸ் பள்ளி மற்றும் உடுமலை ஸ்ரீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் நடக்கிறது.

    முதற்கட்டமாகபிளஸ் 2 விடைத்தாள்கள், தொடர்ந்து, 10ம் வகுப்பு விடைத்தாள், பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.அதன்படி பணிகளில் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் வரும், 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளுக்காக, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும்பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது எனவும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அவ்வகையில் மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் (பொறுப்பு) கூறுகையில், 10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த ஆயிரத்து 700 ஆசிரியர்களும், மேல்நிலை வகுப்புகளுக்கு ஆயிரத்து, 360 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விடைத்தாள் திருத்தும் மையங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    திருப்பூர் அருகே மதிப்பெண் குறைவாக எடுத்ததால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். #SSLCExam
    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். பனியன் தொழிலாளி. இவரது மகன் சிவசுப்பிரமணியம் (15). இவர் இடுவம் பாளையத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி இருந்தார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவன் சிவசுப்பிரமணியன் தனது நண்பர்களுடன் தேர்வு முடிவை பார்க்க சென்றார். அப்போது அவர் 247 மதிப்பெண்ணே பெற்று இருப்பது தெரிய வந்தது.

    அதிக மதிப்பெண் பெறுவேன் என ஆவலுடன் இருந்த சிவசுப்பிரமணியம் குறைவான மதிப்பெண் பெற்று இருந்ததால் மனம் உடைந்தார். அவர் அழுது புலம்பியபடி காணப்பட்டார். அவரை சக நண்பர்கள் பெற்றோர் சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் சமாதானம் அடையவில்லை. நேற்று இரவு மாணவன் சிவசுப்பிரமணியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து வீரபாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிவ சுப்பிரமணியம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #SSLCExam
    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்ற பழமொழிக்கேற்ப உருவம் சிறியதானாலும் சாதனை பெரியது என்பது போல் 2 அடி உயரமே உள்ள மாணவி தன்னம்பிக்கையுடன் படித்து 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். #SSLCExam
    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த பழமார் நேரிமாதா கோவில் தெருவைச்சேர்ந்த ஜெயபால். விவசாயி, இவரது மனைவி. இவர்களுக்கு மகள் சுவேதா. இவர் 2 அடி உயரம் மட்டுமே உள்ளார்.

    திருக்காட்டுபள்ளியை அடுத்த அலமேலுபுரம் பூண்டி சின்னராணி உயர் நிலைப்பள்ளியில் மாணவி சுவேதா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தனது உயரம் குறைவாக இருந்த போதிலும் சக மாணவிகள், ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் மாணவி சுவேதா விடாமுயற்சியுடன் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

    நேற்று வெளியான தேர்வு முடிவுகளில் மாணவி சுவேதா 291 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய 76 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சிறப்பாக சுவேதாவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    தனது தேர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள பள்ளிக்கு வந்த சுவேதாவை பள்ளி தலைமை ஆசிரியர் வினோலா, மற்றும் அருட் சகோதரிகள் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    பழமார்நேரி ஆர்.சி தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்னர் அலமேலுபுரம் பூண்டி தொடக்கப்பள்ளியில் படித்தேன். சுக மாணவிகள், ஆசிரியர்கள் என்னிடம் வேறுபாடு காட்டாமல் நன்றாக பாடங்களை சொல்லிக் கொடுத்ததால் நான் தேர்ச்சி பெற்றேன். மேலும் பிளஸ்-1 படிப்பேன். அதற்கு கடும் முயற்சி எடுத்து படித்து உயருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி மாணவி சுவேதாவின் தாயார் வின்சி கூறும் போது, ‘‘ என் மகள் பிறந்த போதே உயர குறைபாடு தெரிந்து விட்டது. அவளை நாங்கள் வேறுபாடு காட்டாமல் வளர்த்து வந்தோம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்று மேலும் படிக்கிறேன் என்று சொல்வது மகிழ்ச்சிதான். ஆனால் அரசு என் மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கி உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்றார். #SSLCExam
    ×