என் மலர்
நீங்கள் தேடியது "SSLC public exam"
- கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
- அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை:
நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை அரசு தேர்வுத் துறை தயாரிக்க இருக்கிறது. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு ('எமிஸ்') தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும், அதில் திருத்தம் இருந்தால் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த 27-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான அவகாசத்தை நீட்டித்து அரசு தேர்வுத் துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந்தேதிக்குள் விவரங்களை சரிபார்க்கவும், திருத்தங்கள் இருந்தால் அதனை மேற்கொள்ளவும், விவரங்களை பின்னர் பதிவேற்றம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
- 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
சென்னை:
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார். அதன்படி,
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்.
* 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
* 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
* 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும்.
* 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும்.
- வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
- மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை :
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-
தமிழ் -8 பேர், ஆங்கிலம்- 346 பேர், கணிதம் - 1,996 பேர், அறிவியல்- 10,838 பேர், சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.
முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-
சிவகங்கை- 98.3 சதவீதம், விருதுநகர்- 97.5 சதவீதம், தூத்துக்குடி- 96.8 சதவீதம், கன்னியாகுமரி 96.7 சதவீதம், திருச்சி- 96.6 சதவீதம்.
- தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
- மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.
- எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
- தேர்வு எழுதுவதற்கு 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதியுடனும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 5-ந் தேதியுடனும் நிறைவு பெற உள்ளது.
இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும்,
தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் என மொத்தம் மாவட்டத்தில் 119 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டுப்பாட்டு மையத்தில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வினாத்தாள் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம்பள்ளத்தில் உள்ள யு.ஆர்.சி. பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும். தேர்வுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் தேர்வுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
- மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ந்தேதி வெளியானது. இத்தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அதே போல் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்வில் பெற்று பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று வெற்றி பெற வாழ்த்துகள்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக்குவித்து வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
விரைவில் நாம் சந்திப்போம்!
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பரிசுகளையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.விரைவில் நாம் சந்திப்போம்! pic.twitter.com/OUYZYhl5Ni
— TVK Vijay (@tvkvijayhq) May 10, 2024
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 33 ஆயிரத்து 287 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 16 ஆயிரத்து 589 மாணவர்களும், 16 ஆயிரத்து 698 மாணவிகளும் அடங்குவர்.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 15 ஆயிரத்து 422 மாணவர்கள், 16 ஆயிரத்து 161 மாணவிகள் என மொத்தம் 31 ஆயிரத்து 581 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 92.97 சதவீதமும், மாணவிகள் 96.78 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் தேர்வை 15 ஆயிரத்து 816 மாணவர்கள், 16 ஆயிரத்து 407 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 223 பேர் எழுதினர். ஆங்கில தேர்வை 15 ஆயிரத்து 726 மாணர்வகள், 16 ஆயிரத்து 354 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 80 பேர் எழுதியுள்ளனர். கணிதபாடத் தேர்வை 15 ஆயிரத்து 793 மாணவர்கள், 16 ஆயிரத்து 311 மாணவிகள் என மொத்தம் 32 அயிரத்து 104 பேர் எழுதியுள்ளனர். அறிவியல் தேர்வை 16 ஆயிரத்து 326 மாணவர்கள், 16 ஆயிரத்து 601 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 927 பேர் எழுதியுள்ளனர். சமூகவியல் பாடத் தேர்வை 15 ஆயிரத்து 922 மாணவர்கள், 16 ஆயிரத்து 393 மாணவிகள் என 32 அயிரத்து 315 பேர் எழுதியுள்ளனர்.
கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தஞ்சை மாவட்டம் மாநில அளவில் 95.21 சதவீதம் பெற்று 14-வது இடத்தை பெற்று இருந்தது. இந்தாண்டு தஞ்சை மாவட்டம் 94.88 சதவீதம் பெற்று மாநில அளவில் 21-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்த மதிப்பெண்களே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






