என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு"
- பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
- 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
சென்னை:
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி இன்று வெளியிட்டார். அதன்படி,
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும்.
* 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
* பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
* 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும்.
* 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும்.
* 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும்.
- வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.
- மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை :
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வில் 93.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.70 சதவீதம், மாணவிகள் 95.13 சதவீதம் ஆகும். வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-
தமிழ் -8 பேர், ஆங்கிலம்- 346 பேர், கணிதம் - 1,996 பேர், அறிவியல்- 10,838 பேர், சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.
முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-
சிவகங்கை- 98.3 சதவீதம், விருதுநகர்- 97.5 சதவீதம், தூத்துக்குடி- 96.8 சதவீதம், கன்னியாகுமரி 96.7 சதவீதம், திருச்சி- 96.6 சதவீதம்.
- தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
- மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 15-வரை எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 9 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே-19-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்னதாக இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.
- சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர்.
- பொதுத்தேர்வு நாளை தொடங்கி 20-ந்தேதிவரை நடைபெற இருக்கிறது.
சென்னை :
பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவுபெற்ற நிலையில், அடுத்ததாக பிளஸ்-1 மாணவர்களுக்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.
இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர்.
இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர்.
மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' தகவல் வந்ததால், செய்முறைத்தேர்வுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் செய்முறைத்தேர்வு நிறைவுபெற்றது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. ஏற்கனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முதல் நாளான தமிழ்தாள் தேர்வில் எவ்வளவு பேர் 'ஆப்சென்ட்' ஆவார்களோ என்ற கேள்வி இப்போதில் இருந்தே பல தரப்பில் எழுப்பப்பட்டுவருகிறது.
இந்த காரணத்தினாலேயே, எப்போதும் அரசின் தேர்வுத்துறை, பொதுத்தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தை வெளியிடும். ஆனால் தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
தற்போது வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள்கூட, கல்வித்துறை வட்டாரத்தில் வெளியான மறைமுக தகவல்களை அடிப்படையாக கொண்டவைதான். அதிகாரப்பூர்வமாக புள்ளிவிவரங்கள் வெளியிடாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.
மேலும், தேர்வு முடிந்ததும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவரங்களை வெளியிடவும் அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 'மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி' என்பதுபோல, அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.






