என் மலர்

    நீங்கள் தேடியது "plus one"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. #ExamResult
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.

    இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

    மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிளஸ்-1 வேதியியல் வினாத்தாளை இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த 10-ந் தேதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது.

    இந்த ஆண்டு பிளஸ்-1 புதிய பாடத்திட்டம் என்பதால் தமிழகத்தில் ஒரே மாதிரியான கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பிளஸ்-2-க்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடைபெற்றது.

    இதில் சமீபத்தில் நடந்த உயிரியல் கேள்வித்தாள் இணைய தளத்தில் வெளியானது. இந்த வினாத்தாளும், தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரி இருந்ததாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் பிளஸ்-1 வேதியியல் தேர்வு இன்று நடைபெறுகிறது. ஆனால் நேற்றே இந்த தேர்விற்கான கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியானது. இதை மாணவ-மாணவிகள் டவுன்லோடு செய்தனர்.

    அரசு பொதுத்தேர்வு எப்படி நடைபெறுகிறதோ அதேபோல் பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 இடங்களில் கேள்வித்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் கேள்வித்தாள் வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வந்து கேள்வித்தாளை பெற்று செல்வார்கள். ஆனால் அதையும் மீறி இன்று நடைபெறும் வேதியியல் கேள்வித்தாள் இணையதளத்தில் வெளியான சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ்-1 வேதியியல் கேள்வி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறுகையில், வேதியியல் கேள்வித்தாளை இணைய தளத்தில் வெளியிட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #HalfYearly #PlusOne #ChemistryQuestion

    ×