என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்று வெளியாகிறது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள்
- பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
- பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
சென்னை:
பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரையிலும் நடந்து முடிந்தது. இதில் பிளஸ்-1 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் பேரும் எழுதி இருந்தார்கள். ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டு இருந்தபோது, தேர்வு முடிவு மே 19-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல், பிளஸ்-2 பொதுத்தேர்வு மே 9-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு, ஒருநாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதியே தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை போன்றே பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான சூழல் இருப்பதாகபேசப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசிய நிலையில், பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ந்தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கும், பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவை பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.
மாணவ-மாணவிகள் https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும், மாணவ-மாணவிகளில் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் அனுப்பப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.






