search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th exam Results"

    திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,937 மாணவர்களும், 12,673 மாணவிகளும் என மொத்தம் 25,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,598 மாணவர்களும், 12,066 மாணவிகளும் என மொத்தம் 23,664 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    89.65 சதவீத மாணவர்களும், 95.221 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.40 ஆகும்.

    மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 94.4 சதவீதமும், 2018-ம் ஆண்டு 91.60 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9,470 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

    இதில் 8,188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.46 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SSLC #SSLCResult

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் புதுவை-காரைக்காலில் 97.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult
    புதுச்சேரி:

    கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதுகுறித்து புதுவை அரசின் பள்ளி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 16 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 192 மாணவர்களும், 8 ஆயிரத்து 328 மாணவிகள் ஆவர்.

    இன்று வெளியான தேர்வு முடிவுகளின்படி அரசு, தனியார் பள்ளிகளில் படித்த 16 ஆயிரத்து 119 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 7ஆயிரத்து 908 மாணவர்களும், 8 ஆயிரத்து 211 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் சென்ற ஆண்டைவிட 7 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி 97.57 சதவீதமாகும்.

    இது கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் அதிகம். அரசு பள்ளிகளை பொறுத்தவரை தேர்ச்சி சதவீதம் 94.85 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 6.79 சதவீதம் அதிகம். புதுவை, காரைக்காலில் 302 அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் 100 சதவீத தேர்ச்சியை 190 பள்ளிகள் பெற்றுள்ளது. புதுவையில் 156 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. காரைக்காலில் 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் 110 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 43 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவையில் 35 அரசு பள்ளிகளும், காரைக்காலில் 8 அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணித பாடத்தில் 25 மாணவர்களும், அறிவியலில் 18 மாணவர்களும், சமூக அறிவியலில் 81 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    450 முதல் 499 வரை ஆயிரத்து 252 மாணவர்களும், 400 முதல் 449 வரை 2 ஆயிரத்து 506 மாணவர்களும், 350 முதல் 399 வரை 3 ஆயிரத்து 36 மாணவர்களும் 300 முதல் 349 வரை 3 ஆயிரத்து 288 மாணவர்களும், 250 முதல் 299 வரை 3 ஆயிரத்து 117 மாணவர்களும், 200 முதல் 249 வரை 2 ஆயிரத்து 552 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #studentspassed #pudhucherryexamsresult #tenthexamsresult
    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. #SSLC #SSLCResult
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

    தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து பார்க்கலாம்.

    இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியான தேர்வு முடிவுகளில், மொத்தம் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும், 97%  மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



    இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம்   98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 89.98% தேர்ச்சி பெற்று  வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.  

    பாடவாரியாக தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

    தமிழ்- 96.12%
    ஆங்கிலம்- 97.35%
    கணிதம்- 96.46%
    அறிவியல்- 98.56%
    சமூக அறிவியல்- 97.07%

    இதையடுத்து 6,100 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே 3.7% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் இந்த பொதுத்தேர்வில் 152  சிறை கைதிகள் தேர்வு எழுதினர்.  இதில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளுள் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடைபெறும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேவைப்படும் மாணவ,மாணவிகள் மே 2ம்தேதி முதல் அவரவர் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

    தனித்தேர்வர்கள் மே 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையத்தளத்தில் தற்காலிக மதிப்பேண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். #SSLC #SSLCResult












    ×