என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை
    X

    10-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

    • சிவானிஸ்ரீ தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த பிரபு-தேன்மொழி தம்பதியினர். தற்போது கேரளாவில் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களின் மகள் சிவானிஸ்ரீ. இவர் விருத்தாசலம் அருகே கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி கோ.ஆதனூர் அரசு உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்நிலையில் இன்று காலை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சிவானிஸ்ரீ 500-க்கு 201 மதிப்பெண் எடுத்தால் மனஉளைச்சலில் இருந்த வந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பார்த்தபோது சுயநினைவு இழந்து இறந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவானிஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×