என் மலர்

  நீங்கள் தேடியது "Engineering College"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொறியியல் கல்லூரி வளாகத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படத் தொடங்கும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்.
  • வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் மாவட்ட த்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு தற்காலிக மாக செய்யது அம்மாள் பொறி யியல் கல்லுாரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

  அங்கு ஓரிரு வாரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளை (மாதிரிபள்ளிகள்) தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

  ராமநாதபுரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு கட்டடங்கள் இல்லாததால் தனியார் இடத்தில் வாடகை அடிப்படையில் பள்ளியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதி அறைகள், உண்டு உறைவிட பள்ளிக்குரிய வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

  முதல் கட்டமாக பிளஸ் -2 வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புக்கு 40 பேரும், தமிழ் வழி வகுப்புக்கு 40 பேரும் என 80 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். ஓரிரு வாரங்களில் பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளதாக வும், வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தேர்ச்சி விகித பட்டியலில் 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
  சென்னை:

  தமிழ்நாட்டில் 540-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.

  அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என இக்கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கி வருகின்றன.

  என்ஜினீயரிங் கல்லூரிகள் வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

  2018-ம் ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்கலைக் கழக செமஸ்டர் தேர்வுகளில் பி.இ., பி.டெக்., மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

  இதில் 481 இணைப்பு அங்கீகார கல்லூரிகளின் தேர்ச்சி விகித விவரங்களை கல்லூரிகள் வாரியாக உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினர்? அவர்களில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றனர்? தேர்ச்சி விகிதம் எவ்வளவு? ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.  தேர்ச்சி விகித பட்டியலின் படி 6 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த கல்லூரிகளில் இருந்து பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு 682 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர்.

  59 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறந்த தேர்ச்சி விகிதத்தை கொண்ட கல்லூரியில் கூட 85.57 சதவீத மாணவர்கள்தான் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 3 கல்லூரிகள் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். #AnnaUniversity
  சென்னை:

  தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

  மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக 43 இடங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.

  ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக செயல்படும் இந்த மையங்களில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சென்று விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

  இந்த மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதால் 1.50 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வை தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் இயக்குனர் தலைமையில் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாட்கள், நேரம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திட்டமிட்டு வருகிறார்கள்.

  மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கல்லூரிகள் பாடப்பிரிவுகளை தெரிவு செய்யவும், ஒதுக்கீட்டு ஆணை வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

  இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் புருஷோத்தமன் கூறியதாவது:-

  நேற்று வரை 61,723 பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாக ரேண்டம் எண் வழங்கப்படும். 43 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையங்களை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அந்தந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சென்னையில் தான் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவின் ஒதுக்கீடு பெற விரும்புபவர்கள் கட்டாயம் சென்னைக்கு வர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார். #AnnaUniversity
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் எலி இருந்த சம்பவம் குறித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  சோழிங்கநல்லூர்:

  செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் இருந்த எலி ஒன்று தத்தளித்தபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை.

  இந்தநிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர், செம்மஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வி.ஐ.டி. கல்லூரியின் மாணவர்கள் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #PUBG  ஸ்மார்ட்போன் ஆன்லைன் கேமிங்கில் இந்த ஆண்டின் பிரபல கேமாக பப்ஜி இருக்கிறது. பப்ஜி விளையாட்டு உலகில் அதிகம் விற்பனையாகும் கணினிக்கான் கேம்களில் முன்னணி இடம் பிடித்திருக்கிறது. பப்ஜி விளையாடுவதால் மாணவர் தங்கும் விடுதியின் சூழல் பாதிக்கப்படுவதால் தங்கும் விடுதியில் பப்ஜி விளையாட வி.ஐ.டி. மாணவர் தங்கும் விடுதி தடை விதித்துள்ளது.

  இத்தகவலை தங்கும் விடுதியின் காப்பாளர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக ரெடிட் தளத்தில் வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  பப்ஜி விளையாடுவதை தவிர்த்து உடல் மற்றும் மன வலிமையை பரைசாற்றும் விளையாட்டுக்களில் கவனம் செலுத்தவும், மாணவர்கங்கள் தங்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விடுதியின் காப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  புதிய விதிமுறையை மாணவர்கள் பின்பற்ற தவறும் பட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிக்கு மட்டும் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாணவிகள் தங்கும் விடுதியில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

  பொறியியல் கல்லூரியில் பப்ஜி விளையாட மாணவர்களுக்கு தடை விதிக்ககப்பட்டு இருப்பது மாணவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கேமிற்கான தடை இருபாலினத்தவருக்கும் பொருந்தாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக சுகாதார மையம் கேமிங்கை ஆரோக்கிய சீர்கேடாக அறிவித்தது. இத்துடன் மனநல ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் அறிவியல் துறைக்கான தேசிய ஆணையம் பப்ஜி கேம் பலரை அடிமையாக்கி இருப்பதாக தெரிவித்திருந்தது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #TNMinister #Anbazhagan
  நெல்லை:

  நெல்லையில் இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. அகில இந்திய அளவில் உயர்கல்வி பயில்வோர் 25.2 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு உயர்கல்வி பயில்வோர் 46.8 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு அது மேலும் 2.1 சதவீதம் உயர்ந்து 48.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு முடிந்து, அடுத்த கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களை விட விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை குறைவு. எனவே எல்லோருக்கும் இடம் கிடைக்கும்.

  வருகிற செப்டம்பர் 1-ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் மாணவர்களை சேர்க்கவும், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் அதிகம் மாணவர் சேர்கைக்கும், தனியார் கல்லூரிகளில் 10 சதவீதம் அதிகம் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க தனியார்கள் சார்பாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க பரிசீலனை நடத்தி வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Anbazhagan
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling

  சென்னை:

  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த அரசு முடிவு செய்தது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அடுத்த மாதம் ஆன்லைன் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதற்காக ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கியது.

  இந்நிலையில், ஆன்லைன் கலந்தாய்வுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆன்லைன் கலந்தாய்வால் கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் ஆன்லைன் கலந்தாய்வுடன் பழைய முறையையும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  இதேபோல் வழக்கறிஞர் பொன் பாண்டியனும் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கில், தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

  இந்த வழக்கில் நேற்று ஐகோர்ட் தீர்ப்பளித்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் முறையை மக்கள் ஏற்றுக்கொண்டதால் தடை விதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNEA2018 #Engineering #AnnaUniversity #TNEAOnlineCounselling
  ×