search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood camp"

    • கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    நெல்லை:

    மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஒத்துழைப்புடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வழி நடத்தினர்.

    மேலும் மாணவர்களுக்கு ரத்ததானம் அவசியம் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா மற்றும் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பி.கே பாபு மற்றும் துணை செயலாளர் பர்மா ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மணிகண்டன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணா, புதூர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சரத்சேகர், ஒன்றிய தலைவர் சிவா, ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    • அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலர் விஜயபாண்டியன், வக்கீல் அணியை சேர்ந்த சிவபெருமாள், சங்கர்கணேஷ், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துராஜ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 50 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர். ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்தனர்.


    • மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம், செந்நாடா சங்கம், விழுப்புரம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி இணைந்து இந்திய சுதந்திர 75-வது ஆண்டின் சிறப்பிற்காகவும், சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

    முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாஜலபதி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தின் கலந்து கொண்டனர்.

    ஜிப்மர் ரத்ததான வங்கி யிலிருந்து மருத்துவ குழுவினர் தகுதியுள்ள கொடை யாளர்களை வகைப்படுத்தி 264 யூனிட் ரத்தத்தை பெற்றனர். மாணவ-மாணவிகள் முகாமுக்கு வந்து ரத்த பரிசோதனை செய்து ரத்ததானம் அளித்தனர்.

    முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செந்நாடா சங்க அலுவலர் பேராசிரியர் கருணாகரன் செய்திருந்தார்.

    • நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் புனித ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
    • நிர்வாக இயக்குனர்கள் ராமையா, பரமசிவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நெல்லை:

    ராஜகிரி பவுண்டேஷன் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து 6-வது வருட ரத்ததான முகாம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நெல்லை மாநகராட்சி அருகில் உள்ள ராஜகிரி பவுண்டேஷன் அலுவலகத்தில் நடத்தியது.

    நிர்வாக இயக்குனர்கள் ராமையா, பரமசிவன் ஆகியோர் தலைமை தாங்கினர். உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவர் புனித ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ராஜகிரி பவுண்டேஷனின் ஊழியர்கள், விற்பனை பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    ×