search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdul Kalam birthday"

    • அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலர் விஜயபாண்டியன், வக்கீல் அணியை சேர்ந்த சிவபெருமாள், சங்கர்கணேஷ், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துராஜ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 50 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர். ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்தனர்.


    • அப்துல்கலாமின் 91-வது பிறந்த நாளையொட்டி ராமேசுவரம் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
    • ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு பிராத்தனை நடந்தது.

    ராமேசுவரம்

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிராத்தனை நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், டி.ஆர்.டி.ஓ. சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் பழனிசாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேக்ரும்பு கிராமத்தில் உள்ள அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. #ABJAbdulKalam
    ராமநாதபுரம் :

    அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்டவர் ஏபிஜே அப்துல் கலாம். குழந்தைகள், இளைஞர்களால் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவர்.

    இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.

    இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநராக இருந்த போது, எஸ்.எல்.வி III ராக்கெட்டைக் கொண்டு, ரோகினி-I என்ற துணைக்கோளை விண்ணில் ஏவச் செய்தார்.

    1998ஆம் ஆண்டு மே 11ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக நாடுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2002ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்வானார்.

    கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான பங்களிப்பால், ‘பத்ம பூஷன்’, பத்ம விபூஷன் விருது மற்றும் பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார்.



    அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து இறந்தார்.கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.  

    2011ஆம் ஆண்டு அப்துல் கலாம் பிறந்தநாளை இனி உலக மாணவர்கள் தினமாக கொண்டாட ஐ.நா சபை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்படுவது போல், அவரது மணிமண்டபம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஒளியூட்டப்பட்டது. #ABJAbdulKalam
    ×