என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ராமேசுவரம் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை
  X

  அப்துல்கலாம் சமாதியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நடிகர் தாமு, மற்றும் பேரன்கள், ஜமாத் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  ராமேசுவரம் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அப்துல்கலாமின் 91-வது பிறந்த நாளையொட்டி ராமேசுவரம் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
  • ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு பிராத்தனை நடந்தது.

  ராமேசுவரம்

  மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

  இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிராத்தனை நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், டி.ஆர்.டி.ஓ. சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் பழனிசாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  Next Story
  ×