உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரத்ததான முகாம்
Published on

கோத்தகிரி,

கோத்தகிரியில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி கல்வி துறை அமைச்சரும் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் ரத்ததான முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் பி.கே பாபு மற்றும் துணை செயலாளர் பர்மா ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் மணிகண்டன்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணா, புதூர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சரத்சேகர், ஒன்றிய தலைவர் சிவா, ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் கெளதம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com