search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr.sivanthi adithanar"

    • கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார்.
    • கட்டுமான துறை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை சார்பில், கட்டுமான துறையினருக்கான சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி, வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி ஜெய் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி கூறினார். நெல்லை ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி சார்லஸ் எதிர்கால மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகள், கல்வி உதவித்தொகை பெற உதவும் ஆயத்த தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தார். தூத்துக்குடி கில்மெட் என்ஜினீயரிங் உரிமையாளர் கில்பெர்ட் ராஜேஷ் 'ஸ்டெப் அப்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    கட்டிடம் கட்டும்போது ஏற்படும் சவால்கள், அரசு உள்ளாட்சி துறையில் சர்வேயர் லைசென்ஸ் பெறும் முறைகள், கட்டிட வரைபட அனுமதி பெறும் முறைகள் குறித்து நாகர்கோவில் மனாஸ் என்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் நிர்வாகி லிங்கேஸ்வரன், திசையன்விளை பேஷன் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி எடிசன், தென்காசி டி.கே.எஸ்.பில்டர்ஸ் உரிமையாளர் தங்கபாண்டி ஆகியோர் விளக்கி கூறினர்.

    பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். கட்டிடம் கட்ட தேவையான அரசு உதவிகள், மானியம் பெறுதல், கட்டிடவியல் பிரச்சினைகளை சமாளிக்கும் முறைகள் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். இதில் கட்டிடவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், கட்டிடவியல் துறைத்தலைவர் தமிழரசன், பேராசிரியர்கள் தனகர், முத்துகுமார், சந்திரசேகர், நிஷாந்தி மற்றும் ஆய்வக உதவியாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள குழந்தைகள் நல அங்கன்வாடி மையத்தில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட துணைத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர் லவராஜா, மன்ற தலைவர் முருகன், சேர்முகச்சாமி, பாஸ்கர், ஆனந்த், சபீனா, வைரவசாமி, ஜெயமாரியப்பன், கணபதி, சிலம்பம் ஆசிரியர் சோலை நாராயணன், தினேஷ், கனக லட்சுமி, சதீஷ் உள்ளிட்ட பலர் கலர் கலந்து கொண்டனர்.

    ×