திருநாவலூர் அருகே இரு தரப்பினர் மோதல்- 30 பேர் மீது வழக்குப்பதிவு

பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார். வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
திருநாவலூர் அருகே இரு தரப்பினர் மோதல்- 30 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே ஆண்டிக்குழி பகுதியில் நேற்று தெருக்கூத்து நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார். வரும்போது தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. உடனே பொதுமக்கள் இது குறித்து பரத்திடம் கேட்டனர். ஆத்திரமடைந்த பரத் அவர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகறாக ஏற்பட்டது.

இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பரத் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ், வடிவேல் ,ராஜேந்திரனை கைது செய்தனர் மேலும் இது சம்பந்தமாக 15 பேரையும் தேடி வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் பரத் தரப்பில் ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார். மேலும் பரத் மற்றும் இவரது தரப்பில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com