என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல்"

    • தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
    • தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.

    * தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பது தான் சவால்.

    * அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் டெல்லி தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.

    * ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் இ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. PROXY ஆட்சி நடைபெற்றது.

    * தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.

    * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவ்வளவு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதா?

    * உண்மையான பக்தர்கள் தி.மு.க. அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    * மக்கள் எப்போதும் தி.மு.க. அரசின் பக்கம் தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் மீண்டும் வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
    • இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.

    * அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    * தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள்.

    * அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார்.

    * இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.

    * உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல.

    * தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
    • சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.

    * ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.

    * 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.

    * சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.

    * முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.

    * 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

    * டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
    • கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.

    திண்டுக்கல்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திண்டுக்கல் சென்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மாற்று திறனாளி பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக 4 சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

    மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.13 ஆயிரத்து 342 கோடியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர்.

    * ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல்.

    * தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை.

    * இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.

    * 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.

    * இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது.

    * கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.

    * திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர்.
    • அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த பல வருடங்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் திருவிழாக்கள் நடத்த 10 வருடங்களுக்கு மேல் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் நடத்தப்பட்டன.

    இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்தவர்கள் இங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு மண்டு கோவில் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி இன்று கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த பகுதியை சுத்தம் செய்து வழிபாட்டுக்கு தயார்படுத்தும் பணியில் சிலர் வந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது. பொதுவான இந்த இடத்தில் வழிபாடு நடத்தினால் பின்னர் இந்த இடம் அவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விடும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாவட்ட காவல்துறைக்கு தகவல் வரவே ஏ.டி.எஸ்.பி. தெய்வம், ரூரல் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. மேலும் ஆத்தூர் தாசில்தார் முத்து முருகன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதனால் கோர்ட்டு அனுமதித்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என்றும், யாரும் இப்பகுதியில் அமைதியை குலைக்கும் வகையில் பிரச்சனை செய்யக்கூடாது என தெரிவித்து 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்படுவதாக தாசில்தார் முத்துமுருகன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 250க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அது வரை அமைதி காக்க வேண்டும் எனவும் தாசில்தார் முத்துமுருகன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்தடை.
    • லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு,

    திண்டுக்கல்:

    லெட்சுமணம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை லெட்சுமணம்பட்டி, சுக்காம்பட்டி, காளனம்பட்டி, பஞ்சம்பட்டி, காக்காதோப்பு, சேடபட்டி, பெருமாள் கவுண்டன்பட்டி ஆகிய ஊர்களுக்கும், சிறிய, பெரிய தொழிற்சாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை.

    திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகி வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

    அந்த மாணவியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா? என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.

    இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் கூறி உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த ஜோஸ் மரியராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடிவருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளத்தூர், காளனம்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்ெபாறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் புறநகர் பகுதியான பொன்னகரம் துணைமின்நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளர் பிரதீஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • சிறுமி வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை.
    • சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லை சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தவறுதலாக ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை விழுங்கி விட்டார். அதன் பிறகு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு சரியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை உருவானது.

    அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர். பரிசோதனைக்குப் பிறகு வயிற்றில் சேப்டி பின் இருப்பதை பார்த்த டாக்டர்கள் அதனை அகற்ற 3 முறை முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் சேப்டி பின்னில் வாய் திறந்த நிலையில் குடலுக்குள் இருப்பதால் அதனை அகற்ற முடியாது என டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    அதன் பிறகு சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறியது. இதனால் பெற்றோர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தங்கள் மகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குடல் உள்நோக்கி (எண்டோஸ்கோபி) மூலம் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து சேப்டி பின்னை அகற்றினர்.

    தற்போது சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பியதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை போல அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும் சாதித்து காட்டியதால் அவர்களுக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    காந்திகிராமம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காந்திகிராம பல்கலைக்கழகம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகன்பட்டி, இந்திராபுரம், பெருமாள் கோவில்பட்டி வேளாங்கன்னிபுரம், சின்னாளப்பட்டி, கிழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்து சென்று விட்டனர்.

    தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எரியோடு அ.தி.மு.க. செயலாளர் அறிவாளி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் நடந்த தீ விபத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் தீ வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×