என் மலர்
நீங்கள் தேடியது "Union Secretary"
- நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
- அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய் அவர்களே.
நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.
கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.
உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்…
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வத்திராயிருப்பு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
சிவகாசி
வத்திராயிருப்பு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளரும், வத்திராயிருப்பு முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான அழகர்சாமி, மாவட்ட அ.ம.மு.க. துணைச் செயலாளர் முருகேசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி முருகேசன், தி.மு.க.வை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்து விலகினர்.
அவர்கள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜ வர்மன், வத்திராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு பேரூர் செயலாளர் வைகுண்ட மூர்த்தி, பேரூர் பொருளாளர் கனகராஜ், வத்திராயிருப்பு முன்னாள் பேரூர் செயலாளர் நெல்லை யப்பன், ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சக்தி நடேசன், மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய் ஆனந்த், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உடனிருந்தனர்.
- பா.ம.க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
- திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் சதாம் ராஜா, அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு சந்தான தாஸ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் புதிய கிளைகள் அமைக்க வேண்டும், கிளைகள் அனைத்திலும் கொடி ஏற்ற வேண்டும், இளைஞர் சங்கங்களை பலப்படுத்த வேண்டும், ராமநாதபுரம் மாவட்டம் வைகை நீர் ஒப்பந்தத்தின்படி 12-ல் 7 பங்கு நீரை தமிழக அரசு ராமநாதபுரம் மாவட் டத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப் பட்டது.
பசுமை தாயகத்தின் மாநில துணைச் செயலாளர் கர்ண மகா ராஜா, மாவட்ட துணை செயலாளர் ராசிக், ராமநாத புரம் நகர செயலாளர் பாலா, மண்ட பம் ஒன்றிய செய லாளர் வெங்கடேஷ், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் லட்சு மணன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை செயலாளர் கார்த்திக், இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்க அமைப் பாளர் ராம் நகர் லட்சுமணன் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம்,
சிறுபான்மை பிரிவு செயலாளர் வாப் பாசா, மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், மாவட்ட மாணவர் சங்க அமைப் பாளர் கபில்தேவ், கடலாடி ஒன்றிய செயலாளர் இரு ளாண்டி, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் முனிய சாமி, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் சாகுல், மண்டபம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முனியசாமி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் முகமது ஷரீப் நன்றி கூறி னார். புதிய மாவட்ட இளைஞர் சங்க அமைப்பா ளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நகர் லட்சுமணனுக்கு மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
- கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
- திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் 2700-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் அனைவரும் விவசாயிகளாக உள்ள நிலையில் வங்கியில் வரவு செலவு வைத்து தங்களது பணத்தை டெபாசிட் செய்தும் வைத்துள்ளனர்.
அவ்வாறு வைத்திருந்த பணத்தை அவர்களது கவனத்திற்கு வராமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி என்பவரும், வங்கி செயலாளர் அ.பெரியசாமி என்பவரும் மோசடி செய்து சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் வங்கி முன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்களை சமாதானப்படுத்திய கூட்டுறவு துறை அதிகாரிகள் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவரவர் கணக்குகளில் எவ்வளவு மோசடி நடைபெற்றிருக்கிறது என்று கணக்கெடுத்து உரிய தொகையை பெரிய சாமியின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட்டு திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் பொதுமக்கள் அமைதியாக இருந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த மாதம் 21-ந் தேதி வங்கியை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்த சரக கூட்டுறவு பதிவாளர் கிருஷ்ணன் வங்கிக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பொதுமக்களின புகாரின் பேரில் விசாரனை செய்த கூட்டுறவு துறை அதிகாரிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சரகம் எளச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சேமிப்பு கணக்கு பயிர்க்கடன், நகைக்கடன், மத்தியகாலக் கடன், மாற்றுத்திறனாளி கடன், இட்டுவைப்பு கடன், உரம் மற்றும் உறுப்பினரிடம் தொகை வசூலித்து சங்கத்தில் வரவு வைக்காதது உள்ளிட்ட இனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 அளவிற்கு முறைகேடுகள் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பா.அருளரசு அறிவுரையின் படி திருச்செங்கோடு துணைப்பதிவாளர் பி.கிருஷ்ணன் முறை கேடுகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட சங்கச் செயலாளர் அ.பெரியசாமி மற்றும் எழுத்தர் சி.பெரியசாமி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு எதிரிலேயே அதே பகுதியை சேர்ந்த வாசுகி என்பவர் தேங்காய், பழம் மற்றும் பூஜை பொருட்கள் கடை வைத்து நடத்தி வருகிறார்.
திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்து வருபவர் சரவணன். இவரது உறவினர் சிவராமன். இவரும் அதே பகுதியில் தேங்காய் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் கோவிலில் சிதறு தேங்காய் சேகரிப்பதையும் குத்தகைக்கு எடுத்துள்ளார்.
வாசுகி நடத்தி வரும் கடையால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக சிவராமன் கூறி வந்தார். எனவே அவரை கடையை காலி செய்யுமாறு அடிக்கடி கூறி மிரட்டி வந்துள்ளார். இதற்கு வாசுகி மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இது தொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது திருமயம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன், சிவராமன் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து வாசுகியை சரமாரியாக தாக்கினர்.
இதனை தடுத்த வாசுகிக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்கள் கவுரி உள்பட 3 பேரையும் தாக்கி விட்டு, வாசுகியின் கடையையும் சூறையாடினர். பட்டப்பகலில் பலரது முன்னிலையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வாசுகி, கவுரி உள்ளிட்ட 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து திருமயம் போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சரவணன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் ஒன்றிய கழக செயலாளர் பெ.சரவணன் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK






