லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் இ.பி.எஸ்... தரம் வாய்ந்த மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம் - மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
லேப்டாப் திட்டத்தை நிறுத்தியவர் இ.பி.எஸ்... தரம் வாய்ந்த மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம் - மு.க.ஸ்டாலின்
Published on

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.

* ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.

* 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.

* சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.

* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.

* 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

* அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

* டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com