என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சையத் முஷ்டாக் அலி டிராபி: தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்
    X

    சையத் முஷ்டாக் அலி டிராபி: தமிழக அணியின் கேப்டனாக வருண் சக்கரவர்த்தி நியமனம்

    • துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

    சென்னை:

    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாடு அணி, டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது. இந்தத் தொடரில், தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பிரிவில் ராஜஸ்தான், டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், திரிபுரா, ஜார்கண்ட் மற்றும் சௌராஷ்டிரா போன்ற பலம் வாய்ந்த அணிகளும் உள்ளன. தமிழ்நாடு அணி தனது முதல் போட்டியில் அகமதாபாத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம்:-

    வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்),துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்)வி.பி. அமித் சாத்விக், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், டி. நடராஜன், குர்ஜப்னீத் சிங், ஏ. இசக்கிமுத்து, ஆர். சோனு யாதவ், ஆர். சிலம்பரசன், எஸ். ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்).

    Next Story
    ×