என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC Rankings"

    • பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    சுப்மன் கில் ஒரு இடம் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார். இதை தவிர டாப் 10-ல் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார். கேஎல் ராகுல் 2 இடம் முன்னேறி 14-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தில் உள்ளார். மற்றபடி பந்து வீச்சு தரவரிசையில் பெரிய மாற்றம் இல்லை.

    • ஒருநாள் பேட்டர் தரவரிசையில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஆடவருக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் கோலி 5-வது இடத்திலும் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் பின் தங்கி 9-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் நியூசிலாந்து வீரர் டேவான் கான்வே 11 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா முதல் முறையாக முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதல் இடம் பிடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
    • 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் முதல் இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். 

    முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் 5-வது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    • பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார்.
    • முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.

    இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஒரு சதம், ஒரு அரை சதம் விளாசினார்.
    • சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

    ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் ஒரு அரை சதம் விளாசினார். இதனால் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி 781 புள்ளிகளுடன் முதல் இடத்தை ரோகித் பிடித்துள்ளார்.

    அந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சுப்மன் கில் 2 இடங்கள் பின் தங்கி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதே போல விராட் கோலி 1 இடம் பின் தங்கி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய தொடரில் ஒரு அரை சதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 23 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    • பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்திய வீரர்களான சிராஜ், கேஎல் ராகுல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    அந்த வகையில் பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை ஜடேஜா 6 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த இடத்தை பிடித்து சாத்னை படைத்துள்ளார். அதேபோல கேஎல் ராகுல் 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட் தொடர்கிறார். இதை தவிர பெரிய அளவில் எந்த மாற்றம் இல்லை.

    அடுத்ததாக பந்து வீச்சில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் பும்ரா தொடர்கிறார். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

    ஆல்ரவுண்டரில் யாரும் நெருங்க முடியாத முதல் இடத்தில் ஜடேஜா உள்ளார். இந்த பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் பிடித்துள்ளார்.

    • ஐசிசி தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து சாதனை.
    • இதற்கு முன்னதாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் 900 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றிருந்தனர்.

    இந்திய டி20 அணியின் அதிரடி வீரராக இளம் வீரர் அபிஷேக் சர்மா திகழ்ந்து வருகிறார். தொடக்க வீரராக விளையாடி வரும் அவர், குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்து வருகிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 39 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.

    இந்த நிலையில் ஐசிசி தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் டி20 கிரிக்கெட்டில் பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். மேலும் தரவரிசைக்கான புள்ளிகளில் 900-த்தை தாண்டியுள்ளார். தற்போது 907 புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி 2014ஆம் ஆண்டு 909 மற்றும் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டு 912 புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் 900 புள்ளிகளை கடந்த வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

    • ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    துபாய்:

    ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

    இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகியவை 4,5,6 ஆகிய இடங்களில் உள்ளன.

    ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது

    இந்த ஆண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • இலங்கையின் மகேஷ் தீக்சனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (வீரர்கள் தரவரிசை) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 1 சதம், 1 அரைசதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் டி20 பேட்டிங் தரவரிசையில் 89 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்துள்ளார்.

    டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதல் இடத்திலும் திலக் வர்மா 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் (687 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இலங்கையின் மகேஷ் தீக்சனா (671 புள்ளி), இந்தியாவின் குல்தீப் யாதவ் (650 புள்ளி) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து 2-வது மற்றும் 3-வது இடத்திற்கு பின் தங்கினர்.

    • டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதல் இடத்தில் தொடர்கிறார்.
    • பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மாற்றம் இல்லை.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு 20 ஓவர் ஆட்டங்களில் 2 மற்றும் 5 ரன் வீதம் எடுத்து சொதப்பிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (782 புள்ளி) 2-ல் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திலக் வர்மா (804) 2-வது இடத்துக்கும், இங்கிலாந்தின் பில் சால்ட் ( 791) 3-வது இடத்துக்கும் முன்னேறினர். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 11-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வினில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் 41 பந்தில் சதம் விளாசியதோடு மொத்தம் 125 ரன்கள் திரட்டி சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க 'இளம் புயல்' டிவால்ட் ப்ரீவிஸ் கிடுகிடுவென 80 இடங்கள் எகிறி 614 புள்ளிகளுடன் 21-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் 6 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி, இங்கிலாந்தின் அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹூசைன், இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறியுள்ளார்.
    • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் ஒரு இடமும் சுப்மன் கில் 3 இடங்கள் பின் தங்கி உள்ளனர். ரிஷப் பண்ட் 8-வது இடத்திலும் கில் 13-வது இடத்திலும் உள்ளனர். முதல் இடத்தில் ரூட்டும் ஹாரி புரூக்கும் தொடர்கின்றனர்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் 12 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்தை பிடித்து அசத்தி உள்ளார். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 3 இடங்கள் பின் தங்கி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி பும்ரா தொடர்கிறார்.

    ×