என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஒருநாள் பேட்டர் தரவரிசை: 22 நாட்களுக்குள் ரோகித் சர்மாவின் முதல் இடத்தை பறித்த நியூசிலாந்து வீரர்
- ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
- 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார்.
ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் 2 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் முதல் இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார்.

முதல் இடத்தில் இருந்த ரோகித் சர்மா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் உள்ளார். அதனை தொடர்ந்து சுப்மன் கில் 4-வது இடத்திலும் விராட் 5-வது இடத்திலும் உள்ளனர். ஷ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
Next Story






