என் மலர்
நீங்கள் தேடியது "Dewald Brevis"
- டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார்.
- மஞ்ச சொக்காவை போட்டுக்கொண்டு பாகுபலி மீண்டும் இறங்குவார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.
மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டெவால்ட் ப்ரீவிஸ் சி.எஸ்.கே. அணியில் சேர்க்கப்பட்டது குறித்து அந்த அணியின் வீரர் அஸ்வின் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "டெவால்ட் பிரேவிஸை சரியான நேரத்தில் அணியில் எடுத்தது சிஎஸ்கேவின் MASTERSTROKE என பொருள்படும் வகையில்தான் நான் பேசியிருந்தேன். ஐபிஎல் விதிமுறைகளை எந்த வகையிலும் CSK மீறவில்லை. அடுத்த சீசனுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மஞ்ச சொக்காவை போட்டுக்கொண்டு பாகுபலி மீண்டும் இறங்குவார்" என்று தெரிவித்தார்.
- டிவால்ட் பிரெவிஸ் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசியுள்ளார்.
- இந்த தொடரில் டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்ஸ், 13 பவுண்டரி உள்பட 180 ரன் குவித்தார்.
மெல்போர்ன்:
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன.
இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 26 பந்தில் 6 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 53 ரன்களை விளாசினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்களை விளாசினார்.
இந்நிலையில், இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவின் டிவால்ட் பிரெவிஸ் ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் 6 சிக்சர்களை விளாசியதன் மூலமாக விராட் கோலியின் சாதனையை டிவால்ட் பிரெவிஸ் முறியடித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை டிவால்ட் பிரெவிஸ் பெற்றுள்ளார்.
விராட் கோலி 10 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சிக்சர்களை விளாசியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டிவால்ட் பிரெவிஸ் வெறும் 3 போட்டிகளில் 14 சிக்சர்களை விளாசி முறியடித்துள்ளார்.
மேலும், இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் ஆடிய டிவால்ட் பிரெவிஸ் 14 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 180 ரன்களை குவித்துள்ளார்.
- குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்டு ப்ரீவிஸ்-ஐ 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது.
- அதிக தொகை கொடுத்திருக்கலாம் என்ற வகையில் அஸ்வின் பேசியிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.
மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.
- டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதல் இடத்தில் தொடர்கிறார்.
- பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மாற்றம் இல்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா (829 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு 20 ஓவர் ஆட்டங்களில் 2 மற்றும் 5 ரன் வீதம் எடுத்து சொதப்பிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (782 புள்ளி) 2-ல் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். இதனால் 3-வது இடத்தில் இருந்த இந்தியாவின் திலக் வர்மா (804) 2-வது இடத்துக்கும், இங்கிலாந்தின் பில் சால்ட் ( 791) 3-வது இடத்துக்கும் முன்னேறினர். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்திலும், ஜெய்ஸ்வால் 11-வது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டார்வினில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியில் 41 பந்தில் சதம் விளாசியதோடு மொத்தம் 125 ரன்கள் திரட்டி சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க 'இளம் புயல்' டிவால்ட் ப்ரீவிஸ் கிடுகிடுவென 80 இடங்கள் எகிறி 614 புள்ளிகளுடன் 21-வது இடத்தை பிடித்துள்ளார். இதே ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் 6 இடங்கள் உயர்ந்து 10-வது இடத்தை பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் நியூசிலாந்தின் ஜேக்கப் டப்பி, இங்கிலாந்தின் அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் அகீல் ஹூசைன், இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
- டெவால்டு பிரேவிஸ் 41 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரெவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய டெவால்டு ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடினார். இதனால் டி20 அவர் தனது முதல் சதத்தை (41 பந்தில்) பதிவு செய்து அசத்தினார். அவர் 56 பந்தில் 125 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
இதன்மூலம் மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரீவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
மேலும் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை ப்ரீவிஸ் அடித்தார். இதற்குமுன் 2017-ம் ஆண்டில் டேவிட் மில்லரின் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இதனை தவிர்த்து தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களில் தனிநபரில் அதிக ரன்கள் எடுத்த டூபிளிசிஸ் சாதனையையும் ப்ரெவிஸ் முறியடித்துள்ளார். டூபிளசிஸ் 119 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் ப்ரெவிஸ் 125 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார்.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரேவிஸ் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
- காயத்தால் விலகிய ஒரு வீரருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அவரை ஒப்பந்தம் செய்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4ஆவது வீரராக களம் இறங்கிய டெவால்டு பிரேவிஸ் 56 பந்தில் 125 ரன்கள் விளாசினார். 41 பந்தில் சதம் விளாசினார்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை அணிகள் ஏலத்தில் எடுக்காதது குறித்து டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை ஏலம் எடுக்க அணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மோசமான வகையில் அவற்றை தவறவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த குர்ஜாப்நீத் சிங் காயம் அடைந்தார். இதனால் 2.2 கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இதற்கு முன்னதாக 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
பிரேவிசை இன்னொரு டி வில்லியர்ஸ் என அழைக்கிறார்கள். இவரது ஆட்டம் டி வில்லியர்ஸ் ஆட்டத்தை ஞாபகப்படுத்துவபோன்று இருக்கும்.
- ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா விளையாட உள்ளது.
- இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து முத்தரப்பு தொடரிலும் விளையாட உள்ளது. முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோர் அறிமுகமாகின்றனர்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணி:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டெவால்ட் பிரீவிஸ், கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, ஜுபைர் ஹம்சா, கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே ப்ரிடோரியஸ், லெசெகோ செனோக்வானே, பிரெனலன் சுப்ராயென், கைல் வெர்ரெய்ன், கோடி யூசுப்.
- அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார்.
ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 211 ரன்கள் 2 வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஒருகட்டத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த சி.எஸ்.கே. அணி இருந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்னில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தை ஆர்.சி.பி. பக்கம் கொண்டு வந்தது.
இதற்கடுத்து இறங்கிய பிரேவிஸ் LBW முறையில் டக் அவுட்டானார். இதையடுத்து மற்றொரு முனையில் இருந்த ஜடேஜாவுடன் பிரேவிஸ் ரெவியூ செய்வது தொடர்பாக பேசினார். பின்னர் அவர் ரெவியூ கேட்டபோது, ரெவியூ எடுப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று நடுவர் கூறினார். இதனால் பிரேவிஸ் மனம் உடைந்தார். இதனால் ஜடேஜா நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பிரேவிஸ் விக்கெட்டை மறு ஒளிபரப்பு செய்தபோது பந்து லெக் சைடில் சென்று ஸ்டம்புகளைத் தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து இணையத்தில் பதிவிட்டனர்.
- பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.
- சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது.
ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக ஆடினார். 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்தார்.
இந்த நிலையில் பிரேவிஸ் சென்னை அணியில் நீண்ட காலம் இருப்பார் என்று முன்னாள் சுழற்பந்து வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரேவிஸ் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். சேப்பாக்கம் மைதானத்தில் சிறப்பாக ஆடுவது அவ்வளவு எளிது கிடையாது. தென் ஆப்பிரிக்க அணிக்காகவும், முதல்தர போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் ஐ.பி.எல். தொடரில் இணைந்து உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கூட அவர் கிடையாது. மாற்று வீரராக இணைந்தார். பிரேவிசிடம் அனைத்து ஷாட்டுகளும் ஆடும் திறன் இருக்கிறது. அவருக்கு சி.எஸ்.கே.வுடன் நீண்ட காலம் பயணிக்கும் திறன் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
- அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.
- தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.
- ஏபிடி வில்லியர்ஸ் ஜெர்சி நம்பரையே இவரும் அணிந்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் ப்ரேவிஸ் அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 20 வயதான டேவால்ட் ப்ரேவிஸ், ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க நட்சத்திரமான ஏபி டி வில்லியர்ஸ் மாதிரி விளையாடுவதால் 'பேபி ஏபி' என்று அழைக்கப்பட்டார். ஏபிடி வில்லியர்ஸ் ஜெர்சி நம்பரையே இவரும் அணிந்துள்ளார். மேலும் பெரிய சிக்சர்களை அடிக்கும் திறனைக் கொண்டுள்ளார்.
குறிப்பாக மிட்விக்கெட் மற்றும் லாங்-ஆன் இடையேயான பகுதியில் அதிகமாக ரன்களை அடிக்ககுடியவர். டேவால்ட் ப்ரேவிஸ் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான 18 பேர் கொண்ட அணியில் ஒரு பகுதியாக உள்ளார். ஆனால் உலகக் கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச போட்டியில் அறிமுகமாக உள்ள நிலையில் அழுத்தம் எனக்கும் பிடிக்கும் என ப்ரேவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
"எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும் என்று எனக்குத் தெரியும்," அழுத்தம் எப்போதும் இருக்கும். நான் அழுத்தத்தை உணர்கிறேன். ஆனால் நான் அதை விரும்புகிறேன். மக்கள் என்னை டெவால்ட் ப்ரீவிஸ் என்று தெரிந்துகொள்ளவும், என்னுடைய விஷயங்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதைப் பார்க்கவும் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






