என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ப்ரீவிஸ் ஒப்பந்தம் குறித்து பேசிய அஸ்வின்: மறுப்பு தெரிவித்த சிஎஸ்கே
- குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்டு ப்ரீவிஸ்-ஐ 2.2 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது.
- அதிக தொகை கொடுத்திருக்கலாம் என்ற வகையில் அஸ்வின் பேசியிருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தவர் குர்ஜப்னீத் சிங். இவர் காயத்தால் 2025 சீசன் தொடங்குவதற்கு முன் அணியில் இருந்து விலகினார். இதனால் ஏலத்தில் எடுக்கப்படாத பேபி ஏபி டி வில்லியர்ஸ் என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸை 2.2 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது.
சிஎஸ்கே அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். அடுத்த சீசனுக்கான Trade பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரில் ஒருவரை ராஜஸ்தான் அணி கேட்கிறது. இதற்கிடையே Trade-க்கு பெரும்தொகை தேவைப்படும். இதனால் நான் கூட வெளியேற்றப்படலாம் என்ற தொனியில் அஸ்வின் கூறியிருந்தார்.
மேலும், டெவால்ட் ப்ரீவிஸ் வெறும் 2.2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்ட்டிருக்கமாட்டார். திரைமறைவில் அதிகத்தொகை இருந்திருக்கலாம் என்பது போன்றும் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி அஸ்வின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. குர்ஜப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் முற்றிலும் ஐபிஎல் விதிமுறைக்கு இணங்க நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளது.






