search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "de villiers"

  • உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.
  • 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று எதிர்பாராத திருப்பங்களுடன் முடிந்துள்ளது. இந்தியா 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக முதல் 4 போட்டிகளிலேயே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்தியா நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற ஜிம்பாபேவுக்கு எதிரான சம்பிரதாய கடைசி போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

  6 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 61* (25) ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முகமது ரிஸ்வானை முந்தி சாதனை படைத்துள்ளார்.

  இந்திய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங் போன்ற முன்னாள் வீரர்களும் அவரை இந்தியாவின் ஏபிடி என்றும் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றும் புகழாரம் சூட்டி வருகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக மீண்டும் ஒருமுறை நேற்றைய போட்டியில் வெளுத்து வாங்கிய அவரை நீங்கள் ஏபி டி வில்லியர்ஸ் போல மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்படுகிறீர்கள் என்று போட்டி முடிந்ததும் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் பாராட்டினார்.

  அதற்கு உலகிலேயே ஏபி டீ வில்லியர்ஸ் மட்டுமே 360 வீரர் என்று மறுப்பு தெரிவித்த சூர்யகுமார் யாதவ் அடக்கத்துடன் பேசியது பின்வருமாறு. உலகிலேயே 360 டிகிரியில் விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார் என்று கூறினார். அவரது இந்த அடக்கமான பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி ஏபி டீ வில்லியர்ஸ் கவனத்தை நேரடியாக ஈர்த்தது.

  அதனால் மகிழ்ச்சியடைந்த அவர் நீங்கள் அந்த இடத்திற்கு மிகவும் வேகமாக வந்து கொண்டிருக்கிறீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். அப்படி இந்திய வீரரை மனதார பாராட்டிய ஏபி டீ வில்லியர்ஸ் கொடுத்த அந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ஏலத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸை வாங்கியுள்ளது. #PSLDraft2018 #PSL
  பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2019 சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் தெரிவித்திருந்தார்.

  இன்றைய ஏலத்தில் இருவரும் பிளாட்டினம் பிரிவில் இடம்பிடித்திருந்தனர். டி வில்லியர்ஸை லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது அணி ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. ஷாகித் அப்ரிடியையும் 6-வது அணி ஏலம் எடுத்துள்ளது.
  அடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers
  பெங்களூரு:

  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.  இதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.

  இந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

  கோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.

  விராட் கோலி 2013-ம் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers 
  டி வில்லியர்ஸ், மொயீன் அலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2018 #RCBvSRH
  ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

  அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பார்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பார்தீவ் பட்டேல் 1 ரன்னிலும், விராட் கோலி 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எதிர்முனையில் டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், விராட் கொலி அவுட்டாகும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4.5 ஓவரில் 38 ரன்கள் எடுத்திருந்தது.

  அடுத்து டி வில்லியர்ஸ் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தார்கள். இதனால் ரன்ரேட் சராசரியாக 10-ஐ தொட்டது. 12-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

  மறுமுனையில் விளையாடிய மொயீன் அலி 13-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 25 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரின் அதிரடியால் 13-வது ஓவரில் 18 ரன்களும், 14-வது ஓவரில் 14 ரன்களும் குவித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14 ஓவரில் முடிவில் 144 ரன்கள் குவித்திருந்தது.

  இன்னும் 6 ஓவர் இருந்ததால் ஸ்கோர் 225 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 15-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவர் ராயல் சேலஞ்சர்ஸ்க்கு பேரிடியாக அமைந்தது. 2-வது பந்தில் டி வில்லியர்ஸும், 4-வது பந்தில் மொயீன் அலியும் ஆட்டமிழந்தனர்.  டி வில்லியர்ஸ் 36 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்தில் 2 பண்டரி, 6 சிக்சருடன் 65 ரன்களும் குவித்தனர். இருவரும் ஆட்டமிழக்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 14.4 ஓவரில் 149 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற நிலை ஏற்பட்டது.

  ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அதிரடியாக விளையாடி 17 பந்தில் ஒரு பவண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்களும், சர்பராஸ் கான் 8 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 22 ரன்களும் குவிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபத்திற்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
  ×