என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SA20"

    • தென் ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது.
    • 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

    கெபேஹா:

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

    கெபேஹாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 204 ரன்கள் குவித்தது.
    • 205 ரன் இலக்கை நோக்கி சென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 115 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்காவில் ஆறு அணிகள் பங்கேற்ற "SA20" 20 ஒவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.

    ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    அதடிப்படையில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 115 ரன்னில் சுருண்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஆகிய அணிகள் இந்த லீக்கில் விளையாடின.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியில் முறையே முதல நான்கு இடங்களை பிடித்தன.

    குவாலிபையர் 1-ல் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் பார்ல் ராயல்ஸை ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

    குவாலிபையர் 2-ல் ஜோகன்னஸ்பர்க்கை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.

    • இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.
    • தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது அற்புதமானது. இந்த தொடருக்கு சிறப்பானது.

    இந்தியாவில் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ், பாகிஸ்தானில் பி.எஸ்.எல். நடைபெறுவது போன்று தென்ஆப்பிரிக்காவில் SA20 லீக் நடைபெற்று வருகிறது.

    இதில் இந்திய வீரர்கள் விளையாட பிசிசிஐ அனுமதிக்கும் என டி வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறுகையில் "இந்திய வீரர்கள் SA20 லீக்கில் விளையாட எதிர்காலத்தில் பிசிசிஐ அனுமதிக்கும் என நம்புகிறேன். இந்திய வீரர்கள் விளையாடினால் மட்டுமே இளம் வீரர்களை அடிப்படையாக கொண்ட லீக்கின் மதிப்பை உயர்த்தும்.

    தற்போது தினேஷ் கார்த்தில் மட்டும் இடம் பிடித்துள்ளார். ஆனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். மேலும் அதிகமான இந்திய வீரர்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

    தினேஷ் கார்த்திக் இந்த வருடம் விளையாட வருவது சிறப்பானது. இந்த தொடருக்கு சிறப்பானது. தற்போது பீக் பார்மில் இருக்கும் வீரர்கள் வந்து விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்.

    பும்ரா, ரஷிப் பண்ட், விராட் கோலி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை தேர்வு செய்வேன்.

    சூர்யகுமார் யாதவ் இங்கே விளையாடினால் கற்பனை செய்து பாருங்கள். அமேசிங்காக இருக்கும். பழைய வீரர்களை எடுத்துக் கொண்டால் உத்தப்பா, இர்பான் பதான் போன்றோர் என் நினைவில் உள்ளனர்" என்றார்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாடுகளில் நடைபெறும் எந்தவொரு லீக்கிலும் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதில்லை. SA20 லீக் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அணி உரிமையாளர்கள்தான் உரிமையாளர்களாக உள்ளனர்.

    • முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பார்ல்:

    தென் ஆப்பிரிக்காவில் உள்ளூர் டி20 தொடரான எஸ்.ஏ. டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பார்ல் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகமாக ஜோ ரூட் 78 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து, 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது. பிரிட்டோரியா தரப்பில் வில் ஜாக்ஸ் 56 ரன்கள் அடித்தார்.

    பார்ல் தரப்பில் ரூட், பிஜோர்ன் போர்டுயின் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி சார்பில் 20 ஓவரையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீசினர். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 20 ஓவரையும் சுழற்பந்தாக வீசிய முதல் அணி என்ற சாதனையை பார்ல் ராயல்ஸ் படைத்துள்ளது.

    • முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி 175 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 177 ரன்கள் எடுத்து வென்றது.

    கேப் டவுன்:

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பார்ல் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 53 பந்தில் 81 ரன்கள் குவித்தார். பிரேடோரியஸ் 59 ரன்கள் சேர்த்தார்.

    தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஜோர்சி 49 பந்தில் 78 ரன்கள் குவித்தார். ஜோர்டான் ஹெர்மான் 69 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் எஸ்.ஏ.20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது டோனி டி ஜோர்சிக்கு வழங்கப்பட்டது.

    • எஸ்.ஏ.20 இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுனும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது.
    • ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.

    மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.

    தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இதனையடுத்து, நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்று 2 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் அணியும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மொத்தமுள்ளது. கடந்த 2 டி20 லீக் தொடரிலும் வேற்று கோப்பையை கைப்பற்றிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஹாட் ட்ரிக் முறையாக கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    இந்நிலையில், எஸ்.ஏ.20 அரையிறுதிக்கும் இறுதிப்போட்டிக்கும் இடையே இருந்த இடைவெளியில் என்ன செய்தீர்கள் என்று எம்.ஐ.கேப்டவுன் அணி கேப்டன் ரஷித் கானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "நான் தற்போது PRISON BREAK என்ற இணைய தொடரை பார்த்து வருகிறேன். சவாலான சூழல்களில் இருந்து எப்படி மீண்டு வருவது என அதிலிருந்து கற்று வருகிறேன். ஒரு கேப்டனாக சில நேரங்களில் திட்டங்களை மறக்க நேரிடுகிறது. அதனால், தோன்றும் விஷயங்களை கையில் எழுதி வைத்து அடுத்தடுத்த ஓவர்களில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்தார். 

    ×