search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durban Super Giants"

    • முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 204 ரன்கள் குவித்தது.
    • 205 ரன் இலக்கை நோக்கி சென்ற டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் 115 ரன்னில் சுருண்டது.

    தென்ஆப்பிரிக்காவில் ஆறு அணிகள் பங்கேற்ற "SA20" 20 ஒவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த ஆறு அணிகளையும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளனர்.

    ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    அதடிப்படையில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்- டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 115 ரன்னில் சுருண்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஆகிய அணிகள் இந்த லீக்கில் விளையாடின.

    சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், பார்ல் ராயல்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிகள் பட்டியில் முறையே முதல நான்கு இடங்களை பிடித்தன.

    குவாலிபையர் 1-ல் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    எலிமினேட்டரில் பார்ல் ராயல்ஸை ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

    குவாலிபையர் 2-ல் ஜோகன்னஸ்பர்க்கை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.

    • ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர்.
    • இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    கேப்டவுன்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா (இலங்கை), மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட முன்னணி வீரர்களை வைத்துள்ளது. இந்த அணிக்கு டுபிளசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டர்பன்ஸ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக டி காக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ×