search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PSL"

    • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

    முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    முல்தான் சுல்தான்  அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

    போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • 2008-ம் ஆண்டு அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
    • பின்னர் பல்வேறு காரணங்களால் அவர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்.

    கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுப்பதாலும், மைதானம் நிறைந்து காணப்படும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். தன்வீர் சோஹைல், உமர் குல், கம்ரான் அக்மல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.

    அதன்பின் எல்லையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் கிடையாது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அரசியல் பதற்றம்காரணமாக அது தொடர்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ள.

     அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடங்கியது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பதை தெரிவித்து வருவது வழக்கம்தான்.

    அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். நானும் அங்கே சென்று விளையாட விரும்புகிறேன். உலகத்தில் உள்ள மிகப்பெரிய லீக்கில் ஐபிஎல் லீக்கும் ஒன்று. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், "ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பதை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கவலையடையக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    • முதலில் ஆடிய லாகூர் அணி 200 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய முல்தான் அணி 199 ரன்கள் எடுத்து தோற்றது.

    லாகூர்:

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணியும் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்தது. அப்துலா ஷபிக் 40 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷஹீன் அப்ரிடி 15 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் சுல்தான்ஸ் அணி களமிறங்கியது. ரூசோவ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் முகமது ரிஸ்வான் 34 ரன்னும், குஷ்தில் ஷா 25 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்ட நிலையில் முல்தான் சுல்தான்ஸ் அணி 11 ரன்களை மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் போராடி தோற்றது.

    இதன்மூலம் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற லாகூர் குவாலண்டர்ஸ் அணி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    தொடர் நாயகன் விருது இசானுல்லாவுக்கும், ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிடிக்கும் வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ஏலத்தில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸை வாங்கியுள்ளது. #PSLDraft2018 #PSL
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2019 சீசன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கிறது. இதற்கான ஏலம் இன்று நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன டி வில்லியர்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் தெரிவித்திருந்தார்.

    இன்றைய ஏலத்தில் இருவரும் பிளாட்டினம் பிரிவில் இடம்பிடித்திருந்தனர். டி வில்லியர்ஸை லாகூர் குவாலண்டர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-வது அணி ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. ஷாகித் அப்ரிடியையும் 6-வது அணி ஏலம் எடுத்துள்ளது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசனில் 8 போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #PSL
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ல் இருந்து பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவதால் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.

    பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 2017 சீசனில் இறுதிப் போட்டியை மட்டும் லாகூரில் நடத்தியது.



    கடந்த சீசனில் இரண்டு பிளேஆஃப்ஸ் போட்டியை லாகூரிலும், இறுதிப் போட்டியை கராச்சியிலும் நடத்தியது. இந்த முறை 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்துகிறது. இதுதொடர்பாக அணி உரிமையாளர்களிடம் பாகிஸதான் கிரிக்கெட் வாரியம் பேசியுள்ளது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 சீசன் பிப்ரவரி 14-ந்தேதி துபாயில் தொடங்கு மார்ச் 17-ந்தேதி வரை நடக்கிறது. வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு அக்டோபர் இரண்டாவது வாரத்தில் முடிவடைந்து அதன்பின் வீரர்கள் ஏலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8 ஆட்டங்கள் பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் என பிசிபி சேர்மன் நஜம் சேதி தெரிவித்துள்ளார். #PSL
    இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடும்போது பயங்கரவாதிகள் இலங்கை வீரர்கள் வந்த வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயம் அடைந்தார்கள். இதனால் தொடரை பாதிலேயே ரத்து செய்துவிட்டு இலங்கை அணி வெளியேறியது.

    அதன்பின் முன்னணி அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொந்த மண்ணில் போட்டியை நடத்த முயற்சி செய்து வருகிறது.

    தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸை தங்களது சொந்த மைதானமாக கொண்டு பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதேவேளையில் ஐக்கிய அரபு எமிடேஸில் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடைபெற இருக்கின்றன.

    இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடருக்கு மைதானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த அநாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இறுதிப் போட்டிகள் மற்றும் பிளேஃஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.



    இந்நிலையில் அடுத்த சீசனில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் உள்ள மூன்ற மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாகூர் மற்றும் கராச்சி மைதானங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டனர். மூன்றாவது மைதானம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக் தொடரில் விளையாடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முடிவு எடுத்துள்ளது. #PAK #PCB
    டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட்டாக மாற்றமைடைந்து, தற்போது டி20 கிரிக்கெட்டாக விளையாடப்பட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரை தொடங்கியது. இதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அத்துடன் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் சம்பளமாக வழங்கப்பட்டது.

    இதனால் சர்வதேச அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டினார். ஐபிஎல்-ஐ தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வாரியங்கள் டி20 லீக் தொடர்களை நடத்தின.

    ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதில்லை. அதேபோல் இந்திய வீரர்கள் மற்ற தொடர்களில் பங்கேற்பதில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா வீரர்கள் பல்வேறு டி20 லீக்கில் ஆடுகிறார்கள்.

    பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்க வேண்டும். தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.



    புதிய மாற்றத்தின்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரர்கள் வருடத்திற்கு இரண்டு டி20 லீக்கில்தான் விளையாட முடியும். அதற்கு மேல் விளையாட முடியாது.

    பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவார்கள். இதை தவிர்த்து மேலும் என்றில்தான விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் தொழில்முறையாக சம்பளம் குறைவு. இந்நிலையில் இந்த கட்டுப்பட்டால் மேலும் அவர்களது வருமானம் தடைபெற வாய்ப்புள்ளது.

    வேலைப்பளு அதிகம், காயம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    ×