என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ரிஸ்வான், பாபர் அசாம்
    X

    பாகிஸ்தான் சூப்பர் லீக்: நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய ரிஸ்வான், பாபர் அசாம்

    • 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
    • பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.

    இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.

    உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.

    ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.

    Next Story
    ×