என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து
    X

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து

    • 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது
    • தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.

    இந்த வருடம் 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×