என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்தபிசுர் ரஹ்மான்"

    • ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார்.

    வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 28-ம் தேதி முதல் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார்.

    இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அதன்படி பஞ்சாப் கிங்சுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார். மேலும் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் கலித் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்-க்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முஸ்தஃபிசுர் சென்றுள்ளார்

    டெல்லி கேபிடல்ஸ் அணியில் சேர்க்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர், UAE தொடரில் விளையாட புறப்பட்டுச் சென்றதால் குழப்பம்

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், UAE உடனாக தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் புறப்பட்டு சென்றதால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தடையில்லா சான்று கோரி பிசிசிஐ தரப்பில் எந்த கோரிக்கையும் வராததால், ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி அவர் UAE புறப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ. நிசாமுதின் தெரிவித்தார்.

    • இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அவர் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
    • நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனிலை வகிக்கின்றன.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் அணி 40.2 ஓவரில் 237 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியின் போது வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தசைபிடிப்பு காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அதன்பின் அவரால் எழுந்து நிற்ககூட முடியாத நிலையில், அணியின் மருத்துவ குழுவினர் முஸ்தபிசுர் ரஹ்மானை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.

    நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்திருந்தது. நடப்பு சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டுள்ள செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடப்பு சீசனில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • நேற்றைய போட்டியில் காயமடைந்த வங்காளதேச வீரர், ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு கிளம்பியுள்ளார்.

    டாக்கா:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது தசைப்பிடிப்பு காரணமாக நடக்க முடியாமல் தடுமாறினார். உடனே அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

    இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் கலந்து கொள்வாரா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவியது. அந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், உற்சாகமாகவும் எனது புதிய பணிக்காகவும் காத்திருக்கிறேன். ஐ.பி.எல் 2024-க்காக சென்னைக்குச் செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னைக் காத்துக்கொள்ளுங்கள். அதனால் என்னால் முடிந்ததைச் செய்ய முடியும். என பதிவிட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனால் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×