என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேச அரசு"

    • முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஒரு உத்தரவு வந்துள்ளது
    • இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்கதேச அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "மார்ச் 26, 2026 முதல் நடைபெறவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து வங்காளதேச நட்சத்திர வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) ஒரு உத்தரவு வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறோம். 

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக தெரியவில்லை. இம்முடிவு வங்கதேச மக்களைப் புண்படுத்தி, துயரப்படுத்தி, வேதனைப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு உரிய அதிகாரியின் ஒப்புதலுடன், பொது நலன் கருதியும் வெளியிடப்படுகிறது.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும்சூழலில் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தது. அதன்பேரில் முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து வங்கதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    ×