என் மலர்
கிரிக்கெட் (Cricket)

41 பந்தில் சதம் விளாசிய டெவால்ட் ப்ரீவிஸ்: பொன்னான வாய்ப்பை தவற விட்ட ஐபிஎல் அணிகள்- டி வில்லியர்ஸ்
- ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரேவிஸ் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
- காயத்தால் விலகிய ஒரு வீரருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அவரை ஒப்பந்தம் செய்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4ஆவது வீரராக களம் இறங்கிய டெவால்டு பிரேவிஸ் 56 பந்தில் 125 ரன்கள் விளாசினார். 41 பந்தில் சதம் விளாசினார்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை அணிகள் ஏலத்தில் எடுக்காதது குறித்து டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை ஏலம் எடுக்க அணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மோசமான வகையில் அவற்றை தவறவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த குர்ஜாப்நீத் சிங் காயம் அடைந்தார். இதனால் 2.2 கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இதற்கு முன்னதாக 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
பிரேவிசை இன்னொரு டி வில்லியர்ஸ் என அழைக்கிறார்கள். இவரது ஆட்டம் டி வில்லியர்ஸ் ஆட்டத்தை ஞாபகப்படுத்துவபோன்று இருக்கும்.






