search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LBW law"

    • பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு.
    • பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க முயற்சிப்பது உண்டு. வலது கை பேட்ஸ்மேன் இடது கை பேட்ஸ்மேன் போன்றோ, இடக்கை வீரர் வலதுகை வீரர் போன்றோ திடீரென திரும்பி நின்று பந்தை அடித்து விரட்டுவார்கள். இன்னும் சிலர் உடலை திருப்பாமல் பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மட்டும் மாற்றிக்கொண்டு ஆடுவார்கள். பேட்டர்கள் இது போன்று ஆடுவது சகஜமாகி விட்டதால் எல்.பி.டபிள்யூ. விதிமுறைகளில் திருத்தம் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

    யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிட்டத்தட்ட 10 முறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆடினார். அதில் ஒன்று மட்டுமே பேட்டில் பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதால் ஒரு பேட்ஸ்மேன் எந்த அறிவிப்பும் இன்றி தனது பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மாற்றும் நிலை உள்ளது. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

    ஒரு பந்து வீச்சாளர் எந்த முறையில் பந்து வீசுகிறார் என்பதை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதே போல் பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் அவர்கள் பேட்டிங் செய்யலாம். அதனால் பாதிப்பு பவுலர்களுக்கு தான்.

    எனவே ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் வகையில் பேட்ஸ்மேன் அடிக்கும் போது, பந்து லெக்-ஸ்டம்பு வெளியே 'பிட்ச்'சாகி பேட்டில் படாமல் அது காலுறையில் பட்டால் அதற்கும் எல்.பி.டபிள்யூ. வழங்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் நியாயமானதாக இருக்கும். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    ×