என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்
- சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
- அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னை:
ஐபிஎல் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.
21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.






